தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Infinix:பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளியாகியிருக்கும் Infinix Note 12i

Infinix:பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வெளியாகியிருக்கும் Infinix Note 12i

Jan 25, 2023, 02:11 PM IST

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பைனிக்ஸ், நோட் 12i என்ற புதிய மாடல் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 50MP கேமரா, 5000mAh பேட்டரி போன்ற சிறப்ப அம்சங்கள் நிறைந்த இந்த போன் விற்பனை ஜனவரி 30 முதல் தொடங்குகிறது.

இன்பைனிக்ஸ் சீரிஸ் போன்களில் பட்ஜெட் போனாக இந்த Infinix Note 12i போன் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 9, 999 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனையானது பிரபல ஈகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் ஜனவரி 30ஆம் தேதி தொடங்குகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

ஏற்கனேவே இந்த போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இந்தியாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், வடிவமைப்பில் சிறிய மாறுபாடுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Infinix Note 12i முழுமையான விவரக்குறிப்புகள்

6.7 இன்ச் (2400 × 1080 pixels) Full HD+ AMOLED ஸ்கீரின் டிஸ்ப்ளேயுடன், 60Hz refresh rate மற்றும் 180Hz touch sampling rateம் கொண்டுள்ளது. Corning Gorilla Glass 3 பாதுகாப்பு அம்சம் பொருத்தப்பட்டுள்ளது.

இதில் Octa Core MediaTek Helio G85 12nm processor இடம்பிடித்துள்ளது. அடிப்படையாக 4GB RAM, 64GB மெமரியை கொண்டிருக்கும் இந்த போனில், 512GB வரை நீட்டிப்பு செய்து கொள்ளும் விதமாக microSD ஸ்லாட்டும் உள்ளது.

Android 12ஐ அடிப்படையாக கொண்ட XOS 12 இயங்குதளத்தை கொண்டிருக்கும் இந்த போன், 50MP ட்ரிபிள் கேமரா செட்டப்புடனும், 8MP செல்பி கேமராவும் இடம்பிடித்துள்ளது.

Fingerprint sensor போனின் சைடிலும், 3.5mm audio jack மற்றும் ஸ்டீரியா ஸ்பீக்கர் செட் அப்பும் கொண்டுள்ளது. Force Black,Metaverse Blue ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது.

இந்த போன் சிறப்பு அம்சமாக 5000mAh பேட்டரி 33W விரைவ சார்ஜிங் வசதியை கொண்டிருப்பதாக உள்ளது.

Infinix Note 12i ஸ்மார்ட்போன் வாங்குவோருக்காக பிளிப்கார்ட்டில் பிரத்யேக மைக்ரோசைட் வழங்கப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி