தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Breaking : பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!

Breaking : பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை!

Divya Sekar HT Tamil

Feb 14, 2023, 01:13 PM IST

Income tax team at BBC office : டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். (HT_PRINT)
Income tax team at BBC office : டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Income tax team at BBC office : டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிபிசி அலுவலகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களின் செல்போன்களை அதிகாரிகள் தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆணவனப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்தியா மோடிக்கான கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி அந்த ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்நிலையில் முதல் பகுதியில் குஜராத் மாநிலத்தில் நடந்த வன்முறை கலவரங்களுக்கு முதல் பொறுப்பு அப்போதைய முதல்வர் மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் அதேபோல் அந்த ஆவணப்படத்தின் இரண்டாம் பாதியில் தில்லி வன்முறை குடியுரிமை திருத்த சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறித்து விமர்சித்துள்ளது. 

இந்த ஆவணப்படம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த ஆவணப்படம் காலனிய ஆதிக்க மனோபாவத்தை காட்டுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவண படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி