தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: ஆபாச வீடியோவில் மனைவி - கணவன் உயிரிழப்பு - நடுரோட்டில் காதலன் வெட்டிக்கொலை

Crime: ஆபாச வீடியோவில் மனைவி - கணவன் உயிரிழப்பு - நடுரோட்டில் காதலன் வெட்டிக்கொலை

Apr 30, 2023, 10:57 AM IST

இளம் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞரைப் பெற்றோர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்தனர்.
இளம் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞரைப் பெற்றோர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்தனர்.

இளம் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞரைப் பெற்றோர் நடுரோட்டில் வெட்டி கொலை செய்தனர்.

தெலங்கானா மாநிலம் மஞ்சூரியாலா பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான மகேஷ். இவர் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனை மகேஷ் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Kangana Ranaut: "பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரிப்பது வருத்தமளிக்கிறது" - கங்கனா ரனாவத் பரபரப்பு குற்றச்சாட்டு - வீடியோ

Kangana Ranaut: நடிகை கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட பெண் காவலர்.. சண்டிகர் விமான நிலையத்தில் நடந்தது என்ன?

Israel bombs UN school: காசாவில் உள்ள ஐ.நா பள்ளிக்கூடத்தில் குண்டு வீச்சு: சிறார்கள் உள்பட 30 பேர் பலி

Naveen Patnaik: 24 ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கும் நவீன் பட்நாயக்

இந்நிலையில் அந்த இளம் பெண்ணுக்கும் மகேஷுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இளம் பெண் அவரது தொடர்பைத் துண்டித்துள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத மகேஷ், தன்னை காதலிக்க வேண்டும் எனத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதற்கு இடையில் அந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு இளைஞர் உடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் மிகவும் கோபம் அடைந்த மகேஷ், அந்த இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை அவரது கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனது மனைவி காதலனுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலை செய்து உயிரிழந்தார். இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்ற மகேஷ் அந்த இளம் பெண்ணை விடவில்லை. தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டுமெனத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து அந்த இளம் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் மகேஷுக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வர வேண்டுமென அழைத்துள்ளனர்.

அந்த இடத்திற்கு வந்த அவரிடம் இளம்பெண்ணின் பெற்றோர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை முற்றிப் போனதால் இளம்பெண்ணின் பெற்றோர் நடு ரோட்டிலேயே மகேஷை வெட்டி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே மகேஷ் துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்தனர். மகேஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உள்பட நான்கு பேரைக் கைது செய்தனர். இளைஞர் ஒருவர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி