தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Friend Murder: திருமண அழைப்பிதழ் ஏன் கொடுக்கவில்லை? - நண்பனை கொன்ற நண்பர்கள்!

Friend Murder: திருமண அழைப்பிதழ் ஏன் கொடுக்கவில்லை? - நண்பனை கொன்ற நண்பர்கள்!

Feb 28, 2023, 11:47 AM IST

திருமண அழைப்பிதழ் கொடுக்காததைத் தட்டி கேட்ட நண்பரை சக நண்பர்களே அடித்து கொலை செய்தனர்.
திருமண அழைப்பிதழ் கொடுக்காததைத் தட்டி கேட்ட நண்பரை சக நண்பர்களே அடித்து கொலை செய்தனர்.

திருமண அழைப்பிதழ் கொடுக்காததைத் தட்டி கேட்ட நண்பரை சக நண்பர்களே அடித்து கொலை செய்தனர்.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் வசித்து வருபவர் 36 வயதான பினு. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த செபாஸ்டின், விஷ்ணு என்ற இரு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். எங்குச் சென்றாலும் சேர்ந்து சொல்லும் அளவிற்கு இவர்கள் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

இந்த நண்பர்களின் விஷ்ணுவுக்குத் திருமணம் ஆகிவிட்டது. அதன் பின்னர் செபாஸ்டினுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டது. என் காரணமாக அவர் தனக்குத் தெரிந்தவர்களுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுத்து வந்துள்ளார்.

திருமணநாள் நெருங்கி வந்த காரணத்தினால் அவரது நெருங்கிய நண்பரான பினுவுக்கு செபாஸ்டின் திருமண அழைப்பிதழ் கொடுக்க மறந்துள்ளார். இதற்காக பினு காத்திருந்தாலும் அவரை பார்க்கவும் செபாஸ்டின் வரவில்லை.

இது குறித்து பினு மற்ற நண்பர்களிடம் விசாரிக்கும் போது தங்களுக்கு அழைப்புகள் வந்து விட்டதாக மற்றவர்கள் கூறியுள்ளனர். உயிர் நண்பனாகப் பழகி விட்டு தனக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்பது பினுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக செபாஸ்டின் வீட்டுக்குச் சென்று பினு தனக்கு ஏன் அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்று கேட்டு தகராறு ஈடுபட்டுள்ளார். ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த விஷ்ணு மற்றும் மணமகன் செபாஸ்டின் இருவரும் பினுவை தாக்கியுள்ளனர். அதேசமயம் அறிவாளால் வெட்டி உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் பினு மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பழம் என்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் இருந்து சம்பவம் இடத்திற்கு வந்த கோட்டயம் காவல்துறையினர். பினுவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறைவுக்காக அனுப்பி வைத்தனர். அதேசமயம் தனது நண்பன் உயிரிழந்த தகவலைக் கேட்டதும் விஷ்ணுவும், மணமகன் செபாஸ்டினும் காவல்துறையிடம் சரணடைந்தனர்.

திருமண அழைப்பிதழ் கொடுக்காததைக் கேட்ட இளைஞரை நண்பர்களே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி