தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala Bomb Blast: கேரளா குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு .. இன்று அனைத்து கட்சி கூட்டம்

Kerala Bomb Blast: கேரளா குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு .. இன்று அனைத்து கட்சி கூட்டம்

Oct 30, 2023, 08:51 AM IST

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் நேற்று காலை வழிபாட்டு கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். (PTI)
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் நேற்று காலை வழிபாட்டு கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் நேற்று காலை வழிபாட்டு கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

கேரளமாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரியில் நடந்த ஜெகோவா வழிபாட்டு கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் நேற்று காலை வழிபாட்டு கூட்டத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். வழிபாடு நடத்திக்கொண்டிருந்த போது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத வழிபாட்டு கூட்டத்தில் குண்டு வெடிப்பு நடந்தது எப்படி என கேரள மாநில போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே, திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடக்கரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், குண்டுவெடிப்பு சம்பவத்திற்குக் காரணம் நான்தான் எனக் கூறி டோமினிக் மார்ட்டின் என்பவர் சரணடைந்துள்ளார். முதல்கட்ட விசாரணையில் சரணடைந்தவரின் வீட்டில் சோதனையிட்டபோது குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட ரிமோட் உள்ளிட்டவைகள் சிக்கியுள்ளன. கொச்சியில் உள்ள வீட்டில் இருந்தே குண்டை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், சரணடைந்த டோமினிக் தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், 90 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொடுபுழாவைச் சேர்ந்த குமாரி (53) என்ற பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நலையல் குண்டுவெடிப்பில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தான் மட்டுமே குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக டொமினிக் மார்டின் வாக்குமுலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க இன்று காலை அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி