தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Court Employee Suspends: பேடிஎம் மூலம் டிப்ஸ் வசூலித்த நீதிமன்ற டவாலி சஸ்பெண்ட்!

court employee suspends: பேடிஎம் மூலம் டிப்ஸ் வசூலித்த நீதிமன்ற டவாலி சஸ்பெண்ட்!

Karthikeyan S HT Tamil

Dec 02, 2022, 03:45 PM IST

அலகாபாத் : வழக்கறிஞர்களிடம் இருந்து பேடிஎம் மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் உதவியாளரை சஸ்பெண்ட் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அலகாபாத் : வழக்கறிஞர்களிடம் இருந்து பேடிஎம் மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் உதவியாளரை சஸ்பெண்ட் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அலகாபாத் : வழக்கறிஞர்களிடம் இருந்து பேடிஎம் மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் உதவியாளரை சஸ்பெண்ட் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள அலகாபாத் மாவட்ட மூத்த நீதிபதி அஜித் சிங்கின் உதவியாளராக இருக்கும் இளைஞர், தனது இடுப்பில் ஆடையுடன் சேர்த்து பேடிஎம்-க்கான QR code-ஐ வைத்திருந்தார். அதன் மூலம் நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்களிடம் அவர் பணம் வசூல் செய்து வந்துள்ளார். இதனைக் கவனித்த நீதிபதி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் மூலம் தலைமை நீதிபதிக்குப் புகார் அளித்துள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Modi: ‘2029ஆம் ஆண்டுக்கு பின்னும் நரேந்திர மோடிதான் தலைவர்!’ அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதிலடி!

Kangana Ranaut: ’50 எல்.ஐ.சி பாலிஸிக்களா!’ கங்கனாவின் சொத்து மதிப்பு குறித்து வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

Google CEO Sundar Pichai: ‘இது புதுசு’-கூகுள் தேடுபொறியின் புதிய வெர்ஷன் அறிமுகம்.. இதுல என்ன ஸ்பெஷல்!

இதையடுத்து தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், இதனை முக்கிய பிரச்னையாக கருதி, உடனடியாக விசாரித்து நீதிமன்ற டவாலியை விசாரித்துத் தகுந்த தண்டனை வழங்கியுள்ளார். தற்போது நீதிபதியின் உதவியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், "29.11.2022 தேதியிட்ட நீதிபதி அஜித் சிங்கின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில், நீதிமன்ற டவாலி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உதவியாளர் ஸ்ரீ ராஜேந்திர குமார் என்பவர், ஆடையோடு சேர்த்து பேடிஎம் QR code மூலம் பணம் பெற்றதற்காக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். சஸ்பெண்ட் காலத்தில் அவர் வேறு எந்த வேலை, வர்த்தகம் அல்லது தொழிலில் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழை அளித்தால் அவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி