தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  திறந்த மார்பகங்களுடன் நீச்சல் அடிக்கலாம்! பெண்ணின் போராட்டத்திற்கு பணிந்த அரசு!

திறந்த மார்பகங்களுடன் நீச்சல் அடிக்கலாம்! பெண்ணின் போராட்டத்திற்கு பணிந்த அரசு!

HT Tamil Desk HT Tamil

Mar 10, 2023, 12:08 PM IST

கடந்த டிசம்பரில் 33 வயது பெண் ஒருவர் திறந்த மார்பகங்களை காட்டியவாறு சூரிய குளியலில் ஈடுபட்டதற்காக வெளியேற்றப்பட்டர்
கடந்த டிசம்பரில் 33 வயது பெண் ஒருவர் திறந்த மார்பகங்களை காட்டியவாறு சூரிய குளியலில் ஈடுபட்டதற்காக வெளியேற்றப்பட்டர்

கடந்த டிசம்பரில் 33 வயது பெண் ஒருவர் திறந்த மார்பகங்களை காட்டியவாறு சூரிய குளியலில் ஈடுபட்டதற்காக வெளியேற்றப்பட்டர்

ஜெர்மன் நாட்டில் உள்ள பெர்லின் நகரில் உள்ள பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேல் ஆடை இன்றி குளிப்பதற்கு அனுமதி அளித்து நகர உள்ளூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

PM Modi Exclusive Interview: இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்காதது ஏன்? - பிரதமர் மோடி பரபரப்பு விளக்கம்

Vladimir Putin: ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் மிஷுஸ்டினை மீண்டும் விளாடிமிர் புதின் நியமித்தார்

Swift 2024: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல் இந்தியாவில்அறிமுகம்: விலை எவ்வளவு, பிற அம்சங்களை அறிவோம் வாங்க

Sandeshkhali case: சந்தேஷ்காலி வழக்கில் திடீர் திருப்பம்.. பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற பெண்

கடந்த ஆண்டு டிசம்பரில் 33 வயது பெண் ஒருவர் பெரிலின் நகரில் உள்ள பொது நீச்சல் குளம் ஒன்றில் தனது திறந்த மார்பகங்களை காட்டியவாறு சூரிய குளியலில் ஈடுபட்டார்.

தனது மார்பகங்களை மறைக்குமாறு அங்கிருந்தவர்கள் அவரை பணித்ததால் அவர் நீச்சல் குளத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் தொடர்பாக பாகுபாடு எதிர்ப்பு சட்டத்தை மேற்கொள் காட்டி புகார் அளித்தார். இந்த வழக்கு ஜெர்மனி முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.

பொதுவாக நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடைகள் இன்றி குளிப்பதை இல்லை என்றாலும் கடந்த ஆண்டு கோடை காலத்தில் பெண்கள் மேலாடைகள் இன்றி குளிப்பதை லோயர் சாக்சனியில் உள்ள கோட்டிங்கன் மற்றும் நார்த் ரைன், வெஸ்ட்பாலியாவில் உள்ள சீகன் ஆகிய இடங்களில் அனுமதித்துள்ளதாகவும் மேற்கொள்கள் காட்டப்பட்டது.

இந்த நிலையில் பாலின பாகுப்பாட்டை களையும் வகையில் பெர்லின் நகரில் உள்ள அனைத்து பொதுநீச்சல் குளங்களிலும் குளிக்க வரும் அனைத்து பாலினத்தை சேர்ந்தவர்களும் மேலாடைகள் இன்றி குளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்களில் ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் உள்ள நீர்நிலைகளில் நிர்வாணமாக ஜெர்மானியர்கள் உல்லாசம் அனுபவிப்பதை பார்த்து அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆச்சர்யம் கலந்த அதிருப்தியை அடைவதாக கூறப்படும் நிலையில், பொதுநிர்வாணத்தை ஆரோக்கியமாக கருதும் நாடு இது என சில அமைப்புகள் கூறுகின்றன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி