தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Anti Tobacco Day 2023: சர்வ தேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று

Anti Tobacco Day 2023: சர்வ தேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று

May 31, 2023, 06:20 AM IST

இந்த ஆண்டு, 2023, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் “எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல ” , ((PHOTO FOR REPRESENTATION PURPOSE ONLY))
இந்த ஆண்டு, 2023, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் “எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல ” ,

இந்த ஆண்டு, 2023, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் “எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல ” ,

வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனையில் மிக முக்கியமானது புகையிலை பழக்கம் எனலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

ஐரோப்பாவின் சான் சால்வடார் தீவுக்கு கிபி 1492-ம் ஆண்டு வந்த,கிறிஸ்டோபர் கொலம்பஸ் அப்பகுதி மக்கள் இலை போன்ற ஒன்றை மருந்தாக எடுத்துக்கொள்வதைப் பார்க்கிறார். அதை பயன்படுத்திய மக்களோ மயங்கிய நிலையில் இருப்பதை அறிந்தார். இதனால் அவர் புகையிலையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே அதன் விளைவுகளைக் கண்டறிந்தார். அந்த வகையில் உலகில் முதன் முதலில் புகையிலை என்பதைக் கண்டறிந்தவர் கொலம்பஸ்தான். 

ஆனால், பெரும்பாலான ஐரோப்பியர்கள் 16-ம் நூற்றாண்டின் மத்தியில் புகையிலையின் முதல் சுவையை கூட பெறவில்லை, இதையடுத்து பிரான்சின் ஜீன் நிகோட் போன்றவர்களும், தூதர்களும் புகையிலையின் பயன்பாட்டை மற்ற நாடுகளுக்குப் பிரபலப்படுத்தத் தொடங்கினார்கள். புகையிலை 1556-ல் பிரான்சிற்கும், 1558-ல் போர்ச்சுக்கல், 1559-ல் ஸ்பெயினிலும் அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது, 1565-ல் தொடக்கத்தில் தான் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் உலகம் முழுவதும் வேகமாக பரவிய புகையிலை இந்தியாவில் புகையிலை 17-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய புகையிலையானது உலகம் முழுவதிலும் சுவை மற்றும் மென்மையான தன்மைக்குப் பிரபலமானது; தவிர, தென்கிழக்கு ஆசியா, கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் இந்திய புகையிலைக்கு பெரும் தேவை இருக்கிறது

இன்றைய தேதியில் உலக புகையிலை உற்பத்தியில் முறையே சீனா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளது.

புகையிலையின் பாதிப்புகள்

GERD , Achalasia Cardia (கணையம், வயிறு, வாய், கல்லீரல், மலக்குடல், பெருங்குடல் மற்றும் உணவுக்குழாய்) போன்ற செரிமான அமைப்பின் புற்றுநோய், நரம்பியல் சிக்கல்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள், பக்கவாதம், மூளையின் சிறிய நாள இஸ்கிமிக் நோய் (SVID) மற்றும் வாஸ்குலர் டிமென்ஷியா போன்ற பிற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுடன்

இருதய நோய், நுரையீரல் நோய்கள், சர்க்கரை நோய், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி), காசநோய் , சில கண் நோய்கள் போன்ற ஏராளமான நோய்களுக்கு புகையிலை அடித்தளமிடுகிறது. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1.35 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. புகையிலையின் இரண்டாவது பெரிய நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளராகவும் இந்தியா உள்ளது.

இந்தி நிலையில் தான் புற்றுநோய் இறப்புகளைக் குறைக்கவும், புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் புகையிலை எதிர்ப்பு தினத்தை 1987-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. முதல் முறையாக1988-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது 1989-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு மாற்றப்பட்டது. புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், புகையிலை அபாயங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தவும் இந்த நாள் மிகவும் உதவுகிறது. இதற்காக ஒவ்வோர் ஆண்டும் புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உலக சுகாதார அமைப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

2023ம் ஆண்டுக்கான கருப்பொருள்

இந்த ஆண்டு, 2023, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் “எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல ” , இது புகையிலை உற்பத்தியாளர்களை சந்தைப்படுத்தல் விருப்பங்கள் மற்றும் உற்பத்தி மாற்றுகள் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதன் மூலம் நிலையான மற்றும் சத்தான பயிர்களை பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், உலக உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் புகையிலைக்கு பதிலாக நிலையான பயிர்களுக்கு பதிலாக புகையிலை தொழில்துறையின் நாசவேலை முயற்சிகளின் முயற்சிகளை அம்பலப்படுத்துவதில் கருப்பொருள் கவனம் செலுத்துகிறது.

இந்த நாளில், அரசாங்க அதிகாரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் பொருத்தமான கொள்கைகள், உத்திகள் ஆகியவற்றை வடிவமைத்து செயல்படுத்துகிறார்கள் மற்றும் உணவு நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வகையில் புகையிலை விவசாயிகளை உணவுப் பயிர்களுக்கு மாற்றுவதன் மூலம் சந்தை நிலைமைகளை செயல்படுத்துகின்றனர். கூடுதலாக, பசுமை ஆர்வலர்கள் மற்றும் பொது சமூக நல சங்கங்கள் இணைந்து புகையிலை பயிர்களை வளர்ப்பதை நிறுத்துவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கின்றன.

இந்த நிலையில் புகையிலை எதிர்ப்பு தினமாக இன்று புகையிலை பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கையில் அரசின் முன்னெடுப்புகளுக்கு கைகொடுக்க ஒவ்வொரு தனி மனிதமும் நம்மால் முயன்றவரை  முயல்வோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி