தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  வெள்ள பாதிப்பு.. முதல்வர் ஸ்டாலின் எங்கே இருந்தார்? - வெளுத்தெடுக்கும் நிர்மலா சீதாராமன்!

வெள்ள பாதிப்பு.. முதல்வர் ஸ்டாலின் எங்கே இருந்தார்? - வெளுத்தெடுக்கும் நிர்மலா சீதாராமன்!

Karthikeyan S HT Tamil

Dec 22, 2023, 03:02 PM IST

Nirmala Sitharaman: தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
Nirmala Sitharaman: தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

Nirmala Sitharaman: தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தால் 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

மழை வெள்ளத்தால் தென் மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட போது தமிழக முதல்வா் எங்கே இருந்தாா்? என மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ட்ரெண்டிங் செய்திகள்

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Fact Check: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ? – உண்மைத்தன்மை என்ன?

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

FACT-CHECK : உணவு பரிமாறும் போது பிரதமர் மோடி வைத்திருந்த வாளி காலியாக இருந்ததா? வைரலாகும் புகைப்படம்.. உண்மை என்ன?

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட பணிகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று (டிச.22) டெல்லியில் செய்தியாளா்களை சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து சுமார் 42,000 ராணுவ, கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். அதிகாரபூர்வ தகவலின்படி 31 பேர் உயிரிழந்துள்ளனர். தென் மாவட்ட வெள்ள பாதிப்பை மத்தியக் குழு உடனே ஆய்வு செய்துள்ளது. சென்னை வானிலை மையம் அதிநவீனமானது. உரிய வானிலை முன்னெச்சரிக்கையை வழங்கியுள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை பாதித்த அன்றும், 3 மணி நேரத்துக்கு ஒரு முறை பதிவு செய்யப்பட்டது. இன்ச் பை இன்ச் எவ்வளவு மழை பெய்யும் என்று சொல்ல முடியாது. கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் கொடுத்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருந்தது ஏன்? பாதித்த இடங்களுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் தாமதமாகவே சென்றனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டபோதும் கூட தேசிய பேரிடர் என அறிவிக்கவில்லை. தமிழகத்தில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை, மாநில பேரிடர் என மாநில அரசு அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அதிகாரிகள் செய்வர் என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக செலவு சேய்த ரூ.4,000 கோடி எங்கேப் போனது? முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு வானிலை ஆய்வு மையம் மீது குறைகூறுவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மலா, "2015 வெள்ள பாதிப்பிலிருந்து தமிழக அரசு என்ன கற்றுக்கொண்டது. அதிலிருந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன?. மக்கள் மழை, வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கும்போது தமிழக முதல்வர் என்ன செய்துகொண்டிருந்தார். மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது தமிழக முதலமைச்சர் அமைச்சர் எங்கே இருந்தார்?.. தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லியில் கூட்டணி இண்டியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் இருந்தார். கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை முடித்து போகிற போக்கிலேதான் பிரதமர் மோடியை மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார். பேரிடரின்போது டெல்லியில் இருந்துகொண்டு மத்திய அரசை குறை கூறுவது நியாயமா?." இவ்வாறு கூறினார்.

அடுத்த செய்தி