தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Karnataka :ஐய்யோ! அங்கன்வாடியில் குக்கர் வெடித்து விபத்து..குழந்தைகள் நிலை என்ன?

Karnataka :ஐய்யோ! அங்கன்வாடியில் குக்கர் வெடித்து விபத்து..குழந்தைகள் நிலை என்ன?

Divya Sekar HT Tamil

Feb 10, 2023, 12:47 PM IST

Karnataka cooker blast : கர்நாடகாவில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் குக்கர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
Karnataka cooker blast : கர்நாடகாவில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் குக்கர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

Karnataka cooker blast : கர்நாடகாவில் உள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் குக்கர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

கர்நாடகா: பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா சவலகி அருகே படகி வஸ்தி கிராமத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகிறார்கள். இங்கு நேற்று உதவியாளர் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று குக்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

ட்ரெண்டிங் செய்திகள்

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

Swati Maliwal assault case: கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Fact Check: 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் கல்வி உதவித்தொகை தரப்படும் திட்டம் இருக்கா?

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

இதில் 2 குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் ஆகிய 3 பேரும் காயம் அடைந்தனர். குக்கர் வெடித்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து காயமடைந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேரையும் மீட்டனர். பின்னர் காயமடைந்த குழந்தைகள் சவல்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஜமகண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு குழந்தைக்கு காதில் காயம் ஏற்பட்டது, மற்றொரு குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். விசாரணையில் காயமடைந்த குழந்தைகள் அதேப்பகுதியை சேர்ந்த சமர்த் (4), அத்விக் (3) என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு அங்கன்வாடி ஊழியர்களின் அலட்சியமே காரணம் என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜமகண்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி அனுராதா, அந்த அங்கன்வாடி மையத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ”சமையல் செய்யும்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. குழந்தைகளுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை கூறும்போது, ”அங்கன்வாடி ஊழியர்களின் அலட்சியமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம். குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாததால், வேறு ஒருவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கி குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தோம். இத்தனை சம்பவங்கள் நடந்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து ஜமகண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி