தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Yellow Watermelon Benefits : அட புதுசா இருக்கே.. மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பாருங்க!

Yellow Watermelon Benefits : அட புதுசா இருக்கே.. மஞ்சள் தர்பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பாருங்க!

May 08, 2024, 08:44 AM IST

Yellow Watermelon Benefits : மஞ்சள் தர்பூசணியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின் கண்களுக்கு மிகவும் முக்கியமானது, அதன் நுகர்வு கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வைட்டமின் ஏ சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது. மஞ்சள் தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவு. (Unsplash)
Yellow Watermelon Benefits : மஞ்சள் தர்பூசணியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின் கண்களுக்கு மிகவும் முக்கியமானது, அதன் நுகர்வு கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வைட்டமின் ஏ சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது. மஞ்சள் தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவு.

Yellow Watermelon Benefits : மஞ்சள் தர்பூசணியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின் கண்களுக்கு மிகவும் முக்கியமானது, அதன் நுகர்வு கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வைட்டமின் ஏ சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது. மஞ்சள் தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவு.

நீங்கள் ஒரு சிவப்பு தர்பூசணியைப் பார்த்தீர்கள். கோடையில் இந்த நிறத்திலான தர்பூசணியை சாலை ஓர கடைகள் உட்பட பெரிய சூப்பர் மார்க்கெட் கடைகளிலும் நாம் அதிகம் பார்க்கிறோம். குறிப்பாக கோடையில் தர்பூசணி ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானது. எல்லா வயதினரும் தர்பூசணியை விரும்புகிறார்கள், ஏனெனில் அதன் நீர் உடனடியாக தாகத்தைத் தணிக்கிறது. நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குறைக்கிறது. மிகவும் குறைந்த அளவு கலோரி உடையது என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் நாம் சாப்பிட லாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!

Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!

தர்பூசணியில் சிவப்பு நிற பழங்கள் கிடைப்பது போல மஞ்சள் நிற பழங்களையும் அரிதாக காண்கிறோம். சிவப்பு நிற பழங்களை விட மஞ்சள் தர்பூசணி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.  மஞ்சள் தர்பூசணி இப்போது பிரபலமாகி வருகிறது. மேலும் இந்த மஞ்சள் தர்பூசணியின் ஆரோக்கிய நன்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கண் ஆரோக்கியத்திற்கு நல்லது

மஞ்சள் தர்பூசணியில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. பீட்டா கரோட்டின் கண்களுக்கு மிகவும் முக்கியமானது, அதன் நுகர்வு கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வைட்டமின் ஏ சத்தும் இதில் நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு நல்லது. மஞ்சள் தர்பூசணியில் கலோரிகள் மிகவும் குறைவு. எடை அதிகரிப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மஞ்சள் தர்பூசணியில் உள்ள பொட்டாசியம் வாசோடைலேட்டிங் பண்புகள் நமது இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கொலஸ்ட்ராலை குறைக்கிறது

மஞ்சள் தர்பூசணியில் உள்ள உணவு நார்ச்சத்து உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. இது மாரடைப்பு மற்றும் கரோனரி தமனி நோய் போன்ற இருதய பிரச்சினைகளை குறைக்க உதவும்.

இந்தியாவிலும் வளர்கிறது

மஞ்சள் தர்பூசணி முதலில் ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது. ஆனால் படிப்படியாக அது உலகம் முழுவதையும் சென்று அடைந்தது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீன சந்தைகளில் தேவை அதிகமாக உள்ளது. இப்போது ராஜஸ்தான் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. மஞ்சள் தர்பூசணிகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன.

உண்மையில் தர்பூசணியின் நிறம் லைகோபீன் என்ற வேதிப்பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. அதன் மிகுதியால், தர்பூசணியின் நிறம் சிவப்பு. ஆனால் மஞ்சள் தர்பூசணியில் லைகோபீன் என்ற வேதிப்பொருள் அதிகம் இல்லை. இதன் காரணமாக அதன் நிறம் மஞ்சள். மஞ்சள் தர்பூசணி சிவப்பு நிறத்தை விட இனிமையானது. வைட்டமின் ஏ சத்தும் இதில் நிறைந்துள்ளது.

மஞ்சள் தர்பூசணி பாலைவனத்தின் ராஜா என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் அவை பாலைவனப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. எனவே இந்த பழம் இந்தியாவில் குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சில வறண்ட பகுதிகளில் பெரும்பாலும் விளைகிறது. நீர் தேங்கும் பகுதிகளில் இவை வளராது. மேலும் அதிக தண்ணீரில் விளையும் தர்பூசணி இனிப்பாக இருக்காது.

அளவாக சாப்பிடுங்கள்

மஞ்சள் தர்பூசணியை அளவோடு சாப்பிடுங்கள். இல்லையெனில், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. தலைச்சுற்றல், அதிக வியர்த்தல், அதிகப்படியான பசி, விரைவான இதயத் துடிப்பு, குழப்பம், எரிச்சல் அல்லது மனநிலை மாற்றங்கள் ஆகியவை அறிகுறிகளாக இருக்கலாம்.

இனி வரக்கூடிய நாட்களில் சிவப்பு தர்பூசணி விற்பனை செய்ய குவித்து வைக்க பட்டிருப்பது போல மஞ்சள் நிற தர்பூசணி களும் கோடையில் நம்மை உறுதியாக கவரும் வகையில் இருக்கும்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி