தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Age Difference: ‘அந்த’ விஷயங்களில் உள்ள தெளிவுதான் - வயதில் மூத்த பெண்களை ஆண்கள் விரும்ப காரணம்! ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

Age Difference: ‘அந்த’ விஷயங்களில் உள்ள தெளிவுதான் - வயதில் மூத்த பெண்களை ஆண்கள் விரும்ப காரணம்! ஆய்வில் சுவாரஸ்ய தகவல்

HT Tamil Desk HT Tamil

Jun 06, 2023, 11:49 AM IST

பெண்கள் தங்களது பாலுணர்வை இளையவர்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி வெளிக்காட்டுகிறார்கள். இளம் வயதில் தாங்கள் கொண்டிருந்த பாலியல் சகிப்புத்தன்மையை விட வயதில் மூத்த பருவத்தில் இவர்களிடம் பாலியல் சகிப்புத்தன்மையில் நல்ல புரிதலுடன் இருப்பர். (pexels)
பெண்கள் தங்களது பாலுணர்வை இளையவர்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி வெளிக்காட்டுகிறார்கள். இளம் வயதில் தாங்கள் கொண்டிருந்த பாலியல் சகிப்புத்தன்மையை விட வயதில் மூத்த பருவத்தில் இவர்களிடம் பாலியல் சகிப்புத்தன்மையில் நல்ல புரிதலுடன் இருப்பர்.

பெண்கள் தங்களது பாலுணர்வை இளையவர்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி வெளிக்காட்டுகிறார்கள். இளம் வயதில் தாங்கள் கொண்டிருந்த பாலியல் சகிப்புத்தன்மையை விட வயதில் மூத்த பருவத்தில் இவர்களிடம் பாலியல் சகிப்புத்தன்மையில் நல்ல புரிதலுடன் இருப்பர்.

சில ஆண்கள் வயதில் தன்னை விட மூத்த பெண்களை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், பெரும்பாலும் சமூகத்தில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் ஏன் ஆண்கள் இதில் இப்படி ஈர்ப்பாக இருக்கிறார்கள்? என்கிற கேள்வி நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இதற்கான காரணங்களை ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Gulkand : தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து! ஆற்றல், அமைதி, பாலியல் உணர்வு அதிகரிப்பு என எத்தனை நன்மைகள்!

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

இந்தியா சமூகத்தில் ஆண் பெண் உறவு மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய சமூகத்தில் காதலில் தொடங்கி திருமணம் வரை ஒரு ஆண் எந்த பெண்ணை தேர்ந்தெடுக்கிறார் என்பதை சுற்றி இருப்பவர்கள் மிக முக்கிமான ஒன்றாக கருதுகின்றனர்.

அவர்கள் தன்னுடைய வயதை விட அதிக வயதுள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அல்லது காதலித்தால் அதை இந்திய சமூகம் அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. ஆனாலும் இங்கு சமூகத்தில் மிக முக்கிய பிரபலங்கள் பலர் தங்களை விட வயதில் மூத்த பெண்களை தான் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்லையில் அந்த பிரபலங்களை பின்பற்றும் சில ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துள்ளனர்.

ஆனால் பிரபலங்கள் பெரிதாக பாதிக்கப்படா விட்டாலும், சமானியர்கள் வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்யும் போது பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட விஷயங்கள் இவர்களுக்கு கடும் நெருக்கடியான ஒன்றாக மாறி விடுகிறது.

இருந்தாலும் ஏன் வயது மூத்த பெண்களிடம் ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது? என்று தோன்றுகிறது அல்லவா. இதுகுறித்து ஏராளமான ஆய்வுகள் நடைபெற்றுள்ளது. அதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அடிப்படையாக பெண்களின் அனுபவம் இங்கு ஒரு அடிப்படை காரணம் என்று பார்க்கப்படுகிறது. பெண்கள் எந்த அளவுக்கு வயதானவர்களாக இருக்கிறார்களோ அந்த அளவுக்கு உறவுகளை நேர்த்தியாக கையாளுகின்றனர். அதே சமயம் வயதில் மூத்த பெண்கள் அனுபவங்கள் மூலம் ஒரு ஆணு எப்போது எது தேவை என மிக எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இதனால் தங்கள் வாழ்வில் எல்லா விஷயங்களை கையாள்வதை போல் உறவு முறையிலும் ஆண்களின் எதிர்பார்ப்பை கண்டு கொண்டு செயல்படுவர்.

பெண்களை பொருத்தமட்டில் பிறந்தது முதல் சகோதரி, தோழி, காதலி, மனைவி என பல்வேறு உறவில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார்கள். இதனால் இந்த உறவு முறையில் ஆண்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதை பெண்கள் கவனமாக பார்த்து வந்திருக்கிறார்கள். சரியாக சொல்வதெனில் ஆண்களின் ஒவ்வொரு நகர்வும் பெண்களுக்கு மிக துல்லயமாக கணித்து விடுவர். எனவே, ஆண்களின் தேவை என்ன என்பதை பெண்கள் எந்த வித முயற்சியும் இல்லாமல் எளிமையாக கண்டு கொள்வர். இதனால் பாலியல் ரீதியாகவும் ஆண்களின் தேவைகளையும் வயது மூத்த பெண்களால் சரியாக புரிந்துக் கொள்ள முடியும்.

இந்த இடத்தில்தான் சமூகத்தில் பெண்களை மிக தவறாக சித்தரிக்கின்றனர். ஆனால் பெண்களை இப்படி மாற்றியது ஆண்கள்தான். ஆபாச படங்கள் தொடங்கி பல்வேறு விஷயங்களை பார்க்கும் இன்றைய இளைஞர்கள் அந்த பாலியல் இச்சைகளை தீர்க்கும் பண்டங்களாகவே பெண்களை ஆண்கள்தான் அணுகுகிறார்கள். இதனால் முன்பின் அறியப்படாத பாலியல் செயல்பாடுகளை பெண்கள் அனுபவிக்க நேர்கிறது. இதுதான் பெண்களை பாலியல் விஷயங்களில் அதிக அனுபவம் கொண்டவர்களாக மாற்றுகிறது.

அதேபோல பெண்கள் தங்களது பாலுணர்வை இளையவர்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி வெளிக்காட்டுகிறார்கள். இளம் வயதில் தாங்கள் கொண்டிருந்த பாலியல் சகிப்புத்தன்மையை விட வயதில் மூத்த பருவத்தில் இவர்களிடம் பாலியல் சகிப்புத்தன்மையில் நல்ல புரிதலுடன் இருப்பர். இதனால் அக்கறை, சரியான புரிதல், பாலியல் விவகாரங்களில் போதுமான தெளிவு உள்ளிட்ட விஷயங்கள்தான் வயது மூத்த பெண்களை ஆண்கள் அதிகம் காதலிக்க காரணம் எனலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி