தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Puducherry: புதுச்சேரியில் மினி Mangrove Forest! மிஸ் பண்ணாம விசிட் பண்ணுங்க

Puducherry: புதுச்சேரியில் மினி Mangrove Forest! மிஸ் பண்ணாம விசிட் பண்ணுங்க

Manigandan K T HT Tamil

Apr 04, 2023, 10:32 AM IST

Puducherry Travel: தவறவிடாமல் விசிட் செய்ய வேண்டிய ஓர் இடம் புதுச்சேரியில் இருக்கிறது. அதுதான் மினி Mangrove Forests. சதுப்பு நிலக் காடுகள் (Mangrove Forests) என்றாலே பிச்சாவரம் தான் சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
Puducherry Travel: தவறவிடாமல் விசிட் செய்ய வேண்டிய ஓர் இடம் புதுச்சேரியில் இருக்கிறது. அதுதான் மினி Mangrove Forests. சதுப்பு நிலக் காடுகள் (Mangrove Forests) என்றாலே பிச்சாவரம் தான் சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

Puducherry Travel: தவறவிடாமல் விசிட் செய்ய வேண்டிய ஓர் இடம் புதுச்சேரியில் இருக்கிறது. அதுதான் மினி Mangrove Forests. சதுப்பு நிலக் காடுகள் (Mangrove Forests) என்றாலே பிச்சாவரம் தான் சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகும். மத்திய அரசின் நேரடி ஆளுகையின் கீழ் இயங்கி வருகிறது. டெல்லி போன்று இந்த யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு முதல்வர் தேர்வு செய்யப்பட்டு இருப்பார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Avoid rapid weight loss: ‘விரைவான எடை இழப்பு வேண்டாம்.. வாரத்திற்கு எவ்வளவு எடை குறைந்தால் நல்லது?’-ICMR

Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!

ஆனால், யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநருக்கு இருக்கும் அதிகாரத்தைக் காட்டிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வருக்கு அதிகாரம் குறைவாகவே இருக்கும்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட பிரெஞ்சு ஆளுகையின் கீழ் புதுச்சேரி இருந்துவந்தது. பின்னர் புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்து இந்தியாவுடன் ஒன்றிணைந்தது.

பிரெஞ்சு ஆளுகையின் கீழ் இருந்ததால் பிரெஞ்சுக்காரர்களின் கட்டடக்கலையில் பல கட்டடங்கள் இன்றளவும் கம்பீரமாக புதுச்சேரியில் காட்சி அளிக்கிறது.

அவற்றில் பெரும்பாலானவை அரசு அலுவலகங்களாக இயங்கி வருகின்றன. வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி அமைந்துள்ள இந்த புதுச்சேரியில் சுற்றுலாத் துறைதான் பிரதானம்.

புதுச்சேரி கடற்கரை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. கடலோர ரிசார்ட்டுகளில் அறை எடுத்து சுற்றுலாப் பயணிகள் தங்குவார்கள்.

சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் கடற்கரையையும் பிரெஞ்சு கால கட்டடக் கலையையும் ரசித்து விட்டு சென்று விடுவார்கள்.

ஆனால், தவறவிடாமல் விசிட் செய்ய வேண்டிய ஓர் இடம் புதுச்சேரியில் இருக்கிறது. அதுதான் மினி Mangrove Forests. சதுப்பு நிலக் காடுகள் (Mangrove Forests) என்றாலே பிச்சாவரம் தான் சட்டென்று அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

புதுச்சேரி கடற்கரை

உலகின் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக் காடுகளாக பிச்சாவரம் திகழ்கிறது. பிச்சாவரம் சிம்பரத்துக்கு அருகே அமைந்துள்ளது.

ஆனால், அங்கு செல்ல முடியாதவர்கள், புதுச்சேரியில் உள்ள சதுப்பு நிலக் காடுகளுக்கு சென்று ரசிக்கலாம்.

புதுச்சேரி நகரின் முருங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது இந்த மினி மாங்ரூவ் ஃபாரஸ்ட். Art and Craft Village என கூகுள் மேம்பில் தேடிச் சென்றால் இந்த இடத்திற்கு சென்றுவிடலாம்.

முதலில் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மையம் இருக்கிறது. அங்கு கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமும் உள்ளது. அங்கு கைவினைப் பொருட்கள் கடைகள் இருக்கின்றன. அதை கடந்து சென்றால், போட் ஹவுஸ் வருகிறது.

கிளாஸ் பெயிண்டிங் கடை

அங்கே டிக்கெட் எடுத்துக் கொண்டு படகில் சவாரி செய்ய வேண்டியது தான் நமது வேலை.

வரலாற்றுச் சிறப்புமிக்க இடமான அரிக்கமேடு, சதுப்புநிலக்காடுகள், புதுச்சேரி மீன்பிடி துறைமுகம், கடலையும் நதியையைும் இணைக்கும் River Mouth பகுதி ஆகிய இடங்களை படகில் சுற்றிப் பார்க்கலாம்.

கட்டணம் ஒருவருக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

அரிக்கமேடு

சுமார் ஒன்றரை மணி நேரம் வரை சுற்றிக் காட்டுகிறார்கள். சதுப்பு நிலக் காடுகளில் படகில் பயணிப்பது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும். 4 முதல் 5 பேர் வரை சென்றால் சிறப்பாக இருக்கும்.

சுற்றுலாப் பயணி

அதேபோல், சதுப்பு நிலக் காடுகளை பார்த்துவிட்டு திரும்பும்போது உணவகம் ஒன்றில் நிறுத்துகிறார்கள். சுற்றிலும் தண்ணீர், நடுவில் உணவகம் என மிகவும் அழகாக இருக்கிறது அந்த இடம். அங்கே தங்குவதற்கான அறைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் மினி மாங்ரூவ் ஃபாரெஸ்ட்டில் தங்கலாம்.

மீன்பிடி துறைமுகம்

மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே scuba diving-ம் உள்ளது. படகில் செல்லும்போது பாதுகாப்புக்காக life jackets கொடுக்கப்படுகிறது.

புதுச்சேரிக்குச் சென்றால் இந்த மினி சதுப்பு நில காடுகளை மிஸ் பண்ணாம பார்த்துட்டு வாங்க. கோடைக்கால விடுமுறைக்கு செல்ல ஏற்ற இடங்களில் இதுவும் ஒன்று.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி