தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips : உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கவேண்டுமா? இத மட்டும் செய்ங்க!

Parenting Tips : உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை பிரகாசமாக இருக்கவேண்டுமா? இத மட்டும் செய்ங்க!

Priyadarshini R HT Tamil

Apr 15, 2024, 03:34 PM IST

Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டுமென்றால் இவற்றை மட்டும் கடைபிடித்தால் போதும்.
Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டுமென்றால் இவற்றை மட்டும் கடைபிடித்தால் போதும்.

Parenting Tips : உங்கள் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டுமென்றால் இவற்றை மட்டும் கடைபிடித்தால் போதும்.

உங்கள் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்துக்கு தேவையானவற்றை செய்வது

பெற்றோர்கள், குழந்தைகளை பாதுகாப்பவர்கள் அல்லது குழந்தைகளுக்கு வழிகாட்டுபவர்கள் என அனைவரும் குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை எதிர்த்து போராடும் திறனை வளர்த்து எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். உங்கள் குழந்தைகள், திறமையான, தன்னம்பிக்கையானவர்களாக வளரவேண்டும் என்று நினைப்பார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

இதை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டுமென்றால் நீங்கள் சிறுவயதிலேயே அவர்களின் மனதில் நேர்மறை எண்ணங்களை விதைத்துவிடவேண்டும். அவர்களிடம் குழந்தை முதலே நேர்மறையான எண்ணங்கள் இருந்தால்தான் அவர்கள் நல்ல மனிதர்களாக வளர்வார்கள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கவேண்டிய மனநிலை என்னவென்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்களின் செயல்களில் அர்த்தம் கண்டுபிடியுங்கள்

குழந்தை முதலே குழந்தைகளின் செயல்களில் உள்ள அர்த்தத்தை புரிந்துகொண்டு அதை அவர்களிடம் இருந்து ஊக்குவிக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகிறது.

அவர்களின் விருப்பங்கள், ஆர்வங்கள் என்ன என்பதை அவர்கள் கண்டுபிடிக்க உதவவேண்டும். அவர்களின் நடவடிக்கைகளை, மதிப்பீடுகளுடன் உணர்த்திவிட்டீர்கள் என்றால் நீங்கள் அவர்களுக்கு சிறப்பாக வழிகாட்டுகிறீர்கள் என்று பொருள்.

வேற்றுமை மற்றும் அனுதாபம்

வேற்றுமைகள் பல சூழ்ந்த இந்த உலகில் குழந்தைகள் திறந்த மனதுடன் செயல்படுவதை நீங்கள் ஊக்குவிக்கவேண்டும். அவர்களுக்கு அனைத்தையும் உள்ளடக்கிய மனப்பான்மை ஏற்படுவது மிகவும் அவசியம். அவர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களை காட்டவேண்டும். நம்பிக்கைகள் குறித்து தெரியப்படுத்தவேண்டும்.

பல்வேறு கோணங்களை உணர்த்த வேண்டும். அவர்களிடம் அனுதாபம் மற்றும் புரிதலை வளர்த்தெடுக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்கும் உரையாடல்களை ஊக்குவிக்கவேண்டும். மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்களாக அவர்கள் இருக்கவேண்டும்.

அறிவுப்பசி மற்றும் சுய உறுதியை வளர்த்தெடுக்கவேண்டும்

உங்கள் குழந்தைகள் கேள்விகள் கேட்பதை ஊக்குவிக்கவேண்டும். அவர்களின் ஆர்வங்களை அவர்களை அவர்கள் முயற்சிக்கவேண்டும். அவர்கள் கற்பதை தடுக்காதீர்கள்.

அவர்களுக்கு தவறுகள் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் என வலியுறுத்தி வளர்க்கவேண்டும். அவர்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்கவேண்டும். அவர்களிடம் தன்னம்பிக்கையை ஊட்டுங்கள். அவர்களின் திறன்களை வளர்த்தெடுங்கள்.

சமத்துவம் மற்றும் நீதியின் பக்கம் அவர்கள் நிற்க வேண்டும்

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களுக்கு அவர்களின் குரலை உயர்த்துவதற்கு கற்றுத்தரவேண்டும். அநீதிகளுக்கு எதிராக அவர்கள் பேச அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.

எங்கு அநீதி நடந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் குரலாக உங்கள் குழந்தைகள் செயல்படவேண்டும். சமத்தும், நன்மதிப்பு, இரக்க குணம் ஆகியவற்றை அவரிகளிடம் வளர்த்தெடுக்கவேண்டும்.

சுய அன்பு மற்றும் தங்களை ஏற்றுக்கொள்வது

உங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் தோல்விகள் மற்றும் அவர்கள் சரியாக நடந்துகொள்ளாதது ஆகிய சூழல்களில் அவர்களை நேசிக்க கற்றுக்கொடுங்கள். அவர்களுக்கு அவர்கள் குறித்த ஒரு நேர்மறையான பிம்பத்தை ஏற்படுத்துங்கள்.

அவர்களின் உள்ளார்ந்த திறனை வளர்த்தெடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு சுய அக்கறை பழக்கவழக்கங்களை ஏற்படுத்துங்கள். இதுதான் அவர்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களை அவர்கள் நேசிப்பதற்கும் உதவும்.

மனஉறுதியை வளர்த்தல்

வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஒரு சுகமான மற்றும் சங்கடமான பயணம். இதில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதுதான் நம்மை வடிவமைக்கிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு தோல்விகளில் இருந்து மீள்வதற்கு கற்றுக்கொடுங்கள். அவை வளர்ச்சிக்கான படிகட்டுகள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.

அவர்களிடம் மீண்டெழும் திறனை உருவாக்குங்கள், அவர்கள் சவால்களை சந்திக்கும்பபோது மனஉறுதியுடன் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். நீங்கள் இவற்றையெல்லாம் கடைபிடித்தாலே போதும். உங்கள் வாழ்வு மகிழ்ச்சி நிறைந்ததாகும். உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமானதாக அமையும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி