தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  குழந்தைகள், பெரியோரின் வயிற்றில் பூச்சியைக் கொல்லும் வேப்பம்பூ துவையல்

குழந்தைகள், பெரியோரின் வயிற்றில் பூச்சியைக் கொல்லும் வேப்பம்பூ துவையல்

I Jayachandran HT Tamil

Apr 06, 2023, 03:22 PM IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் பூச்சியைக் கொல்லும் வேப்பம்பூ துவையல் செய்முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் பூச்சியைக் கொல்லும் வேப்பம்பூ துவையல் செய்முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றில் பூச்சியைக் கொல்லும் வேப்பம்பூ துவையல் செய்முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

வேப்பம் பூ துவையலை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துவிடும். நாடாப்புழுக்களும் செத்துவிடும். அத்துடன் மீண்டும் இந்த பூச்சி, புழுக்ககள் வயிற்றில் சேராமல் தடுக்கும் சக்தியும் வேப்பம்பூ துவையலுக்கு உண்டு. வேப்பம்பூக்களை சிறிது மஞ்சள்தூளில் உருட்டி அதிகாலையில் தினசரி சாப்பிட்டு வந்தாலும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

அத்தகைய குணம்படைத்த வேப்பம்பூ வைத்து துவையல் செய்வது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

வேப்பம்பூ துவையல் செய்யத் தேவையான பொருட்கள் –

வேப்பம்பூ – 8 டேபிள்‌ ஸ்பூன்

கடுகு – 1/2 ஸ்பூன்‌

உளுத்தம்‌ பருப்பு – 1 டேபிள்‌ ஸ்பூன்‌

காய்ந்த மிளகாய்‌ – 2

புளி – இரண்டு நெல்லிக்காய்‌ அளவு

பொடித்த வெல்லம்‌ – 1 டேபிள்‌ ஸ்பூன்,

தேங்காய்த்‌ துருவல்‌ – 8 டேபிள்‌ ஸ்பூன்,

பூண்டுப்‌ பல்‌ – 8 (பொடியாக நறுக்கியது).

உப்பு, எண்ணெய்‌ – தேவையான அளவு.

வேப்பம்பூ துவையல் செய்முறை –

வாணலியில்‌ சிறிது எண்ணெய்‌ விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைச்‌ செர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்‌.

பின்‌ அதே வாணலியை அடுப்பில்‌ வைத்து தீயைக்‌ குறைத்து, சிறிதளவு எண்ணெயில் வேப்பம்‌ பூவை வறுத்து அடுப்பை அணைக்கவும்‌.

இனி வறுத்து வைத்திருப்பவைகளுடன்‌ புளி, வெல்லம்‌, தெங்காய்த்‌ துருவல்‌ செர்த்து தெவையான அளவு தண்ணீர்‌ செர்த்து உப்பு போட்டு மிக்ஸியில்‌ அரைத்துக்‌ கொள்ளவும்‌.

விருப்பப்பட்டால்‌ பூண்டுப்‌ பல்லையும்‌ கடைசியில் சேர்த்து அரைத்தெடுக்கவும்‌.

இப்போது மிகவும் சுவையான வேப்பம்பூ துவையல் தயார்.

சாதத்தில்‌ போட்‌டுப்‌ பிசைந்தும்‌ சாப்பிடலாம்‌. இட்லி, தோசைக்கும்‌ தொட்டுக்‌ கொள்ளலாம்‌. குழந்தைகளின் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி