தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Liver Care Juice : கல்லீரல் சுத்தம் செய்ய மூன்று நாட்கள் மட்டும் இந்த பானத்தை அருந்துங்கள்!

Liver Care Juice : கல்லீரல் சுத்தம் செய்ய மூன்று நாட்கள் மட்டும் இந்த பானத்தை அருந்துங்கள்!

Priyadarshini R HT Tamil

Jul 19, 2023, 11:44 AM IST

Liver Care Juice : கர்ப்பிணிகள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். எலும்பு, பற்கள் உறுதியாகும். நரம்பு, எலும்பு, தசை பாதிப்பை குணப்படுத்தும். குழந்தை முதலே கொத்தமல்லியை அதிகம் சேர்ததுக்கொண்டால் கண்பார்வை பிரச்னை ஏற்படாது.
Liver Care Juice : கர்ப்பிணிகள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். எலும்பு, பற்கள் உறுதியாகும். நரம்பு, எலும்பு, தசை பாதிப்பை குணப்படுத்தும். குழந்தை முதலே கொத்தமல்லியை அதிகம் சேர்ததுக்கொண்டால் கண்பார்வை பிரச்னை ஏற்படாது.

Liver Care Juice : கர்ப்பிணிகள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். எலும்பு, பற்கள் உறுதியாகும். நரம்பு, எலும்பு, தசை பாதிப்பை குணப்படுத்தும். குழந்தை முதலே கொத்தமல்லியை அதிகம் சேர்ததுக்கொண்டால் கண்பார்வை பிரச்னை ஏற்படாது.

கல்லீரலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேறி கல்லீரல் ஆரோக்கியத்த மேம்படுத்தும். கல்லீரலை சுற்றியுள்ள கொழுப்பை வெளியேற்றும். கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கும். உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்புகளுள் ஒன்று இந்த கல்லீரல். உடலில் உள்ள தீய நச்சுக்களை வெளியேற்றி உடல் உறுப்புக்களின் செயல்பாட்டை நிர்வகிக்க, புரதங்கள், கொழுப்புக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதே கல்லீரலின் வேலை என்பதால், கல்லீரல் ஆரோக்கியம் ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமான ஒன்றாகும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

இந்த பானம் தயாரிக்க தேவையான பொருட்கள்

கொத்தமல்லித்தழை – இரண்டு கைப்பிடியளவு

பூண்டு – 2 பல்

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

கொத்தமல்லி இழைகளை நறுக்கி கைப்பிடியளவு உப்பு நீரில் நன்றாக கழுவவேண்டும்.

அதை மிக்ஸி ஜாரில் சேர்க்க வேண்டும்.

அதனுடன் இரண்டு பல் பூண்டு, சிறிதளவு உப்பு சேர்த்த நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பருகவேண்டும்.

காலையில் வெறும் வயிற்றி தண்ணீர் மட்டும் அருந்திவிட்டு அரை மணி நேரம் கழித்து இந்த பானத்தை அருந்தவேண்டும்.

கல்லீரல் நச்சுக்களை போக்க உதவுகிறது. அது மட்டுமின்றி வாயுத்தொல்லையை போக்குகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. உடலில் இன்சுலின் சுரப்பை தூண்டி, சர்க்கரை அளவை உடலில் சரியாக பராமரிக்க உதவுகிறது.

உடலில் கொழுப்பை குறைத்து, ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து, மாரடைப்பு வரும் வாய்ப்பை தடுக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், புதிய ரத்த உற்பத்திக்கும் வழிவகுக்கும்.

கர்ப்பிணிகள் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். எலும்பு, பற்கள் உறுதியாகும். நரம்பு, எலும்பு, தசை பாதிப்பை குணப்படுத்தும். குழந்தை முதலே கொத்தமல்லியை அதிகம் சேர்ததுக்கொண்டால் கண்பார்வை பிரச்னை ஏற்படாது.

பூண்டு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. பூண்டில் உள்ள சல்பஃர் கல்லீரலில் உள்ள என்சைம்கள் உற்பத்திக்கு உதவுகிறது.

எலுமிச்சை புத்துணர்ச்சியை கொடுக்கும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது.

இந்த பானத்தை வெறும் மூன்று நாட்கள் மட்டும் குடித்தால் போதுமானது. நெல்லிக்காயும் கல்லீரலை வலுப்படுத்தும் என்பதால் அதையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தினமும் நூற்றுக்கணக்கான வேலைகளை செய்யும் கல்லீரலை நாம் மது போன்ற தூய பழக்கங்களால் கெடுத்துக்கொள்கிறோம். இதுபோன்ற இயற்கை வழிகளை கடைபிடித்து கல்லீரலை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி