தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Avocados For Weight Loss: கொழுப்பு நிறைந்திருந்தாலும் எடை குறைப்புக்கு உதவும் அவகோடா பழங்கள்! எப்படி தெரியுமா?

Avocados For Weight Loss: கொழுப்பு நிறைந்திருந்தாலும் எடை குறைப்புக்கு உதவும் அவகோடா பழங்கள்! எப்படி தெரியுமா?

Aug 22, 2023, 10:50 AM IST

பல்வேறு நன்மைகள் கொண்டிருக்கும் அவகோடா பழங்கள், எடை குறைப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
பல்வேறு நன்மைகள் கொண்டிருக்கும் அவகோடா பழங்கள், எடை குறைப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

பல்வேறு நன்மைகள் கொண்டிருக்கும் அவகோடா பழங்கள், எடை குறைப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

வாழ்க்கைமுறை மாற்றுத்துக்கு ஏற்ப புதிய வகையான நோய் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ஏற்படுகின்றன. டயபிடிஸ், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் தற்போது பலருக்கு ஏற்படும் இயல்பான நோய் பாதிப்பாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் உடல் எடை பருமனும் தற்போது இணைந்துள்ளது. இதனால் பலரும் அதிகரித்து உடல எடையை குறைப்பதற்கு பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

எடை குறைப்பு பயணத்தில் உணவே மருந்தாக பயன்படுத்தும் போக்கும் தற்போது அதிகரித்துள்ளது. அதன்படி கொழுப்புகள் நிறைந்த பழமாக அறியப்படும் அவகோடா எடைகுறைப்புக்கும் உதவுகிறது. எந்தெந்த வகையில் அவகோடா எடை குறைப்புக்கு உதவுகிறது என்பதை பார்க்கலாம்

குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் கலோரிகள், அவகோடா இடம்பெற்றிருக்கும் சக்திகள் கூட்டு, நல்ல கொழுப்பு, ஊட்டச்சத்துகள் போன்ற காரணங்களால் அவகோடா எடை குறைபுக்கான பழமாக இருந்து வருகிறது.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்களையும், டயட்களையும் பின்பற்றுவதன் மூலம் எடை அதிகரித்து உடல் பருமன் ஆக நேரிடுகிறது. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட மற்றும் ஜங்க் உணவுகள், அதிகப்படியான நிறைவுற்ற கொழுப்புகள், அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வது போன்றவற்றால் எடை அதிகரிப்பானது ஏற்படுகிறது.

அவகோடா பழங்கள் உடல் பருமனுக்கு எதிராக போராடுவதுடன், சரியான எடையை பெறுவதற்கும் உதவுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்

காரணம் 1: குறைவான கிளெசமிக் குறியீடு மற்றும் கலோரிகள்

ஒரு அவகோடா பழத்தில் 114 கலோரிகள் இடம்பிடித்துள்ளன. அத்துடன் கிளெசமிக் குறியீடு குறைவாக கொண்டுள்ளது. அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகளை, நிறைவுறா கொழுப்புகளாக மாற்று தன்மை கொண்டிருப்பதால் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, டைப் 2 டயபிடிஸ் வருவதை தடுப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

காரணம் 2: நல்ல கொழுப்பு மற்றும் நார்ச்சத்துகளை கொண்டுள்ளது

அவகோடா பசி உணர்வை குறைக்கும் உணவாக இருந்து வருகிறது. இதில் இடம்பிடித்திருக்கும் ஒற்றை நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் அநாவசியமாக நாம் வேறு உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுகள் சாப்பிடுவதில் கட்டுப்பாடு ஏற்படுகிறது.

அதிகப்படியான நார்சத்துகள் பசி கட்டுப்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக உள்ளது. இதய நோய் பாதிப்பின் அபாயத்தை குறைக்கிறது. அவகோடாவில் இருக்கும் ப்ரீபயாடிக்குகள் (குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கான உணவு) குடலில் மைக்ரோ ஊட்டச்சத்துகளை மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

காரணம் 4: டயட் உணவாக திகழ்கிறது

சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த அவகோடா பழத்தின் க்ரீம் போன்ற தன்மை மயோனிஸ், சீஸ், வெண்ணேய் போன்றவற்றுக்கு சிறந்த மாற்றாக உள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் கலோரிக்களின் அளவையும் கட்டுக்குள் வைத்து கொள்ளலாம்.

காரணம் 5: அவகோடவில் உள்ள பன்முகத்தன்மை

அவகோடா பழங்களை நறுக்கியும், பிளெண்ட் செய்தும், மசித்தும் சாப்பிடலாம். அதேபோல் மற்ற உணவுகள் சேர்த்து தயார் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. எனவே ஆரோக்கியமான உணவுக்கான திட்டமிடலில் பிரதான இடத்தை பிடிக்கும் பழமாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி