தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onion Pickle: ஒரே ஒரு நாள் வெங்காய ஊறுகாய் செஞ்சா போதும்.. 6 மாசம் கவலையே இல்லை!

Onion Pickle: ஒரே ஒரு நாள் வெங்காய ஊறுகாய் செஞ்சா போதும்.. 6 மாசம் கவலையே இல்லை!

Oct 06, 2023, 12:30 PM IST

இந்த ஊறுகாயை நன்றாக ஆற வைத்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வைத்து மூடி விட வேண்டும். அவ்வளவு தான் பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.
இந்த ஊறுகாயை நன்றாக ஆற வைத்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வைத்து மூடி விட வேண்டும். அவ்வளவு தான் பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.

இந்த ஊறுகாயை நன்றாக ஆற வைத்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வைத்து மூடி விட வேண்டும். அவ்வளவு தான் பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.

பொதுவாக வீட்டில் ஊறுகாய் இருந்தாலே போதும். எல்லா உணவிற்கும் இது அட்டகாசமான காமினேசனாக இருக்கும். அப்படி வித்தியாசமான ஒரு வெங்காய ஊறுகாய் எப்படி செய்வது என பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

தேவையான பொருட்கள்

வெங்காயம்

பூண்டு

புளி

நல்லெண்ணெய்

கடுகு

வெந்தயம்

உளுந்தம்பருப்பு

கறிவேப்பிலை

உப்பு

மிளகாய் தூள்

வரமிளகாய்

வெல்லம்

செய்முறை

ஒரு குக்கரில் இரண்டு குழி கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் அரை கிலோ வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். அதில் ஒரு லெமன் சைஸ் புளியை சேர்த்து கொள்ள வேண்டும். அதில் 100 கிராம் பூண்டை உறித்து சேர்த்து கொள்ள வேண்டும். அதில் தண்ணீர் சேர்க்காமல் குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து விட வேண்டும். பின்னர் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து வெங்காயம், பூண்டு மற்றும் புளியை சேர்த்து கொள்ள வேண்டும்.

அதில் 50 கிராம் மிளகாய் தூள், உப்பு, ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் ஒரு கடாயில் இரு ஸ்பூன் கடுகு மற்றும் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். இதை இடி கல்லில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் 100 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும். அதில் 5 மிளகாய் வத்தலை கிள்ளி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும். இரண்டு கொத்து கறிவேப்பிலையை சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பெருங்காய பொடியை சேர்த்து கொள்ள வேண்டும். 

அதில் அரைத்த வெங்காய பேஸ்ட்டை சேர்த்து கலந்து விட வேண்டும். அடுப்பை ஸ்மில் வைத்து நன்றாக கலந்து விட வேண்டும். கடைசியாக அதில் ஒரு ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து கலந்து விட வேண்டும். இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி விடலாம்.

இந்த ஊறுகாயை நன்றாக ஆற வைத்து சுத்தமான கண்ணாடி பாட்டிலில் வைத்து மூடி விட வேண்டும். அவ்வளவு தான் பிரிட்ஜில் வைத்து பரிமாறினால் 6 மாதம் வரை பயன்படுத்தலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி