தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Inji Legiyam: செரிமான கோளாறுகளை குணப்படுத்தும் இஞ்சி லேகியம் இப்படி செய்யுங்க

Inji Legiyam: செரிமான கோளாறுகளை குணப்படுத்தும் இஞ்சி லேகியம் இப்படி செய்யுங்க

Oct 05, 2023, 12:19 PM IST

முடிந்த வரை வெறும் வயிற்றில் காலை ஒரு உருண்டை இந்த இஞ்சி லேகியத்தை சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் வயிற்று பிரச்சனைகள் தீரும்.
முடிந்த வரை வெறும் வயிற்றில் காலை ஒரு உருண்டை இந்த இஞ்சி லேகியத்தை சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் வயிற்று பிரச்சனைகள் தீரும்.

முடிந்த வரை வெறும் வயிற்றில் காலை ஒரு உருண்டை இந்த இஞ்சி லேகியத்தை சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் வயிற்று பிரச்சனைகள் தீரும்.

இன்றைய உணவுகளில் அதிக அளவில், இனிப்பு, நெய், எண்ணெய் சேர்ந்து இருப்பதால் பலருக்கு அடிக்கடி வயிறு பிரச்சனை ஏற்படுகிறது. அப்படி அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி லேகியத்தை எடுத்து கொள்ளலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

தேவையான பொருட்கள்

இஞ்சி - 50 கிராம்

தனியா -அரை கப்

வெல்லம் -அரை கப்

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெல்லம் - அரை கப்

சீரகம் - கால் கப்

மிளகு -1 டீ ஸ்பூன்

ஓமம் -1 டீ ஸ்பூன்

எலுமிச்சை 1

செய்முறை

இஞ்சியை தோல் சீவி குட்டி குட்டியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

சூடான கடாயில் மல்லி விதையை சேர்த்து வறுக்க வேண்டும். மல்லி பாதி வறுந்த பிறகு அதில் கால் கப் சீரகத்தை சேர்த்து வறுக்க வேண்டும். கடைசியாக மிளகு மற்றும் ஓமத்தையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். வறுத்த பொருட்களை நன்றாக ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து சலித்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் அரைக்கப் துருவிய வெல்லத்தை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பாகு காய்ச்ச வேண்டும். வெல்லம் ஒரு கம்பி பதம் வர ஆரம்பிக்கும்போது அரைத்து வடித்த இஞ்சி சாறை சேர்த்து கிளற வேண்டும். இஞ்சி சாறு கொதிக்க ஆரம்பிக்கும் போது வறுத்து அரைத்து சலித்த பொடியை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கிளற வேண்டும். கைவிடாமல் கிளறும்போது லேகியம் கெட்டியாக ஆரம்பிக்கும். அப்போது ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடலாம். பின்னர் அதில் ஒரு லெமன் சாறை சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

நன்றாக ஆற விட்டு இந்த லேகியத்தை ஒரு பாட்டிலில் எடுத்து மூடி வைக்க வேண்டும்.

முடிந்த வரை வெறும் வயிற்றில் காலை ஒரு உருண்டை சாப்பிட்டால் அஜீரண கோளாறுகள் வயிற்று பிரச்சனைகள் தீரும்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி