தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tasty Recipe: பழமையான சுவையான சேனைக்கிழங்கு தோரன் செய்முறை

Tasty Recipe: பழமையான சுவையான சேனைக்கிழங்கு தோரன் செய்முறை

I Jayachandran HT Tamil

Feb 07, 2023, 11:55 AM IST

பழமையான சுவையான சேனைக்கிழங்கு தோரன் செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.
பழமையான சுவையான சேனைக்கிழங்கு தோரன் செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

பழமையான சுவையான சேனைக்கிழங்கு தோரன் செய்முறை குறித்து இங்கு அறிந்து கொள்வோம்.

இது பாரம்பரியான, பழமையான ரெசிபி. அனைவரும் மறந்து போன ரெசிபி. சேனைக்கிழங்கு உடலுக்கு நல்லது. சேனைக்கிழங்கை மசியல் செய்து சாப்பிடலாம். இதுபோன்று தோரன் செய்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும்

ட்ரெண்டிங் செய்திகள்

Fatty Liver in Diabetics: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை.. நீரிழிவு மற்றும் உடல் பருமன் வரை.. இந்த விஷயத்தில் கவனம் தேவை!

புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற நோய்களின் உயிரிழப்புகளுக்கு எது முக்கிய காரணம்- ஜீன்களா? வாழும் நெறிமுறைகளா?

Garlic Peel : இந்த விஷயம் தெரிஞ்சா இனி பூண்டு தோலை கீழ போட மாட்டீங்க.. நீங்கள் இழக்கும் சத்துக்கள் எவ்வளவு தெரியுமா?

Methi water: வெந்தயத் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பாருங்க.. நீரிழிவு முதல் மலச்சிக்கல் வரை

சேனைக்கிழங்கு தோரன் செய்யத் தேவையான பொருட்கள்-

சேனைக்கிழங்கு கால் கிலோ

துவரம் பருப்பு கால் கப்

புளி நெல்லிக்காய் அளவு

மல்லித்தூள் 1 டீ ஸ்பூன்

உப்பு ருசிக்கு

தேங்காய் துருவல் கால் கப்

அரைக்க:- ஊற வைத்த துவரம்பருப்பு

சீரகம் 1 ஸ்பூன்

மல்லித்தூள் 1/2 டீ ஸ்பூன்

சிவப்புமிளகாய் 6

தேங்காய் துருவல்

தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்

உளுந்தம்பருப்பு 1 ஸ்பூன்

கறிவேப்பிலை 1 ஆர்க்கு

தேங்காய்எண்ணெய் 2 ஸ்பூன்

தண்ணீர் தேவையான அளவு

செய்முறை-

ஸ்டெப் 1

தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2

சேனைக் கிழங்கை சுத்தம் செய்து தோலை சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போடவும்.

ஸ்டெப் 3

தேங்காயை துருவிக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து, கொதிக்க வைத்த தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

ஸ்டெப் 4

ஊற வைத்து வடிகட்டிய துவரம்பருப்பு, மிளகாய், சீரகம்,உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸி ஜாரில் அரைத்ததும், தேங்காய் துருவல் சேர்த்து திரும்பவும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 5

புளியை ஊற வைத்து பிறகு நன்கு வடிகட்டவும்.

ஸ்டெப் 6

நறுக்கிய சேனைக்கிழங்கு, புளித்தண்ணீர், உப்பு சேர்த்து 1 விசில் விட்டு குழையாமல் வேகவைத்து ஆறினதும் வடித்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 7

அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், தேங்காய்எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு சூடானதும், கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

ஸ்டெப் 8

தாளித்ததும், அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கி பௌலில் எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 9

அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில், தேங்காய்எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு வடித்த சேனைக் கிழங்கை சேர்த்து 1 நிமிடம் வதக்கிக் கொள்ளவும்.

ஸ்டெப் 10

பிறகு வதக்கிய பருப்பை உதிர்த்து சேனைக் கிழங்குடன், ஒன்று சேர நன்கு வதக்கியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.

ஸ்டெப் 11

பின் பாத்திரத்துக்கு மாற்றவும்.

ஸ்டெப் 12

இப்போது வித்தியாசமான, சுவையான,சேனைக் கிழங்கு தோரன் தயார். காலப்போக்கில் மக்களால் மறந்து போன இந்த ரெசிபியை மறக்காமல் செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

தேங்காய்எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை கிடைக்கும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி