தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Herbal Recipes: எலும்புகளுக்கு வலுசேர்க்கும் பிரண்டையில் சட்னி செய்முறை

Herbal Recipes: எலும்புகளுக்கு வலுசேர்க்கும் பிரண்டையில் சட்னி செய்முறை

I Jayachandran HT Tamil

Jun 12, 2023, 09:06 PM IST

எலும்புகளுக்கு வலுசேர்க்கும் பிரண்டையில் சட்னி செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
எலும்புகளுக்கு வலுசேர்க்கும் பிரண்டையில் சட்னி செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

எலும்புகளுக்கு வலுசேர்க்கும் பிரண்டையில் சட்னி செய்முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; பிரண்டை ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும்; எலும்புகளுக்கு சக்தி தரும். ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்கும். வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும்; உடல் வனப்பும் பெறும். பிரண்டையில் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Papaya Seeds Benefits : குடலில் உள்ள புழுக்களை நீக்குவது முதல் நோய் எதிர்ப்பை அதிகரிப்பது வரை பப்பாளி விதையின் நன்மைகள்!

Honey Benefits in Summer : சுட்டெரிக்கும் வெப்பத்தால் தவிக்கிறீர்களா? இதோ ஒரு துளி தேன் அதற்கு என்ன செய்கிறது பாருங்கள்!

Parenting Tips : குழந்தைகளின் மூளை ஷார்ப்பாக வேண்டுமா? அவர்களை அறிவாளிகளாக்கும் வழிகள் இதோ!

Reasons for Hair Loss : கொத்துக்கொத்தாக கொட்டும் முடியால் அவதியா? இதுதான் காரணங்கள்! தவிர்க்க என்ன செய்வது?

பிரண்டையை வைத்து ஆரோக்கியமான சட்னி செய்யலாம். இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமாகவும் ருசியாகவும் இருக்கும்.

பிரண்டை சட்னி செய்யத் தேவையானபொருட்கள் :

பொடியாக நறுக்கிய -1 கப்

வெங்காயம் -2 கப்

மிளகாய் வத்தல்-4

தனியா -1 தேக்கரண்டி

சீரகம்-1தேக்கரண்டி

தேங்காய் -3 or 5 தேக்கரண்டி

புளி -சிறிதளவு

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் - 1தேக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள் :

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்து -1 தேக்கரண்டி

கடலை பருப்பு -1தேக்கரண்டி

வத்தல் -2

கறிவேப்பிலை

ஆயில் தேவையானவை

செய்முறை :

* கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் ,வத்தல்,தனியா,சீரகம் சேர்த்து நன்றாக வாதக்கவும் .

*பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் .

*வதக்கிய பொருளை தனியாக எடுத்து வைக்கவும்.

*அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரண்டையை நன்றாக வதக்கவும் .

*சூடு அறிய பிறகு வதக்கிய அனைத்தையும் உப்பு,புளி சேர்த்து அரைக்கவும் .

*கடைசியில் தாளிக்க தேவையான பொருளை சேர்த்து தாளித்து சேர்க்கவும் .

*பிரண்டை துவையல் /சட்டினி தயார் .

டாபிக்ஸ்

அடுத்த செய்தி