தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadalaimittai: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு ஊட்டமளிக்கும் கடலை மிட்டாய்

Kadalaimittai: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு ஊட்டமளிக்கும் கடலை மிட்டாய்

I Jayachandran HT Tamil

May 06, 2023, 09:20 PM IST

google News
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு ஊட்டமளிக்கும் கடலை மிட்டாயின் பெருமையையும் செய்முறையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு ஊட்டமளிக்கும் கடலை மிட்டாயின் பெருமையையும் செய்முறையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு ஊட்டமளிக்கும் கடலை மிட்டாயின் பெருமையையும் செய்முறையும் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

தமிழகத்தில் கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வரும் கடலை மிட்டாய் தான், பிரேசில் நாட்டின் பாரம்பரிய இனிப்புப் பண்டமாம்.

கோவில்பட்டியில் தயாராகும் கடலை மிட்டாய்களுக்கு மட்டும் எப்படி ஒரு அட்டகாசமான சுவை கிடைக்கிறது? அதற்குக் காரணம் இந்த ஊரின் மண்வாசனை. அங்கு விளையும் தரமான கடலை மற்றும் தலைமுறைகள் தாண்டி இதை செய்யும் உற்பத்தியாளர்களின் கைப்பக்குவம் என்று நம்புகிறார்கள்.

கடலை மிட்டாய் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. கடலை அதிகம் சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும். ஆனால் கடலை மிட்டாயில் இனிப்பும் சேர்ந்திருப்பதால் அந்தப் பிரச்சனை இல்லை. இதை சாப்பிடும் போது மண்ணீரலுக்கு நேரடியாக சத்து கொடுக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி தான் கோவில்பட்டி. இங்கு முக்கியமாக பருத்தி, நிலக்கடலை மற்றும் கேழ்வரகு, கம்பு போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இலங்கைக்குச் சீதையை மீட்க ராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாக சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கிய தால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள சிற்றூர்கள் பெயர் பெற்றன என்ற சுவாரஸ்ய குறிப்பும் இந்த ஊருக்கு இருக்கிறது.

நீங்களே செய்யலாம்! கடலை மிட்டாய்

தேவையான பொருட்கள்:

வெல்லம் -1 கிலோ

நிலக்கடலை -200 கிராம்

தண்ணீர் வெல்லப் பாகை எடுக்க

உப்பு சிறிதளவு

தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி- தேவைப்பட்டால்

முதலில் நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

வெல்லப்பாகை எடுக்க, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும்.

பாகு நன்றாக திக்காக இருக்கவேண்டும். அதனால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்சவேண்டும்.

இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும்.

தேவைப்பட்டால், இதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக்கொள்ளலாம்.

மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை உருண்டையாக பிடித்துக்கொள்ளவும்.

அசத்தலான கடலை மிட்டாயை சுவைக்கத் தயாராகுங்கள்.

பல நாட்கள் கெடாது. காற்று புகாத ‘ஏர் டைட்’ டப்பாக்களில் சேமித்து வைத்தால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி