தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bed Room Tips : படுக்கை அறையில் எந்த பொருள்கள் இருந்தால் என்ன பலன்?.. இதோ முழுவிவரம்!

Bed Room Tips : படுக்கை அறையில் எந்த பொருள்கள் இருந்தால் என்ன பலன்?.. இதோ முழுவிவரம்!

Divya Sekar HT Tamil

Jun 13, 2023, 12:32 PM IST

உங்கள் படுக்கையறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதையும், சரியான திசையில் படுக்கையை அமைப்பது போன்ற பல தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் படுக்கையறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதையும், சரியான திசையில் படுக்கையை அமைப்பது போன்ற பல தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் படுக்கையறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதையும், சரியான திசையில் படுக்கையை அமைப்பது போன்ற பல தகவல்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.

அனைவரின் வீடுகளில் முக்கியமான ஒரு அறை என்றால் அது படுக்கை அறை தான். அனைவருக்கும் பிடித்த அறை என்றே சொல்லாம். நாம் மிகுந்த மன உளைச்சலில் இருக்கும் போதும், காதலில் இருக்கும் போதும், சந்தோஷமாக இருக்கும் போதும் என பல்வேறு மனநிலையிகளில் நாம் நாடும் ஒரு அறை என்றால் அது படுக்கை அறைதான். சில நேரங்களில் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் கூட அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும். உங்கள் படுக்கையறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பதையும், சரியான திசையில் படுக்கையை அமைப்பது போன்ற பல தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

படுக்கை அறையில் எந்த பொருள்கள் இருந்தால் என்ன பலன்

கணவன் மனைவி பொறுத்தவரை தென் மேற்கு மூலையில் படுக்கை அறை இருந்தால் மிகவும் சிறப்பு

குழந்தைகள், பெரியவர்கள் பொறுத்தவரை வடகிழக்கு மூலையில் படுக்கை அறை இருந்தால் மிகவும் சிறப்பு

உறங்கும் முறை - தெற்கு மற்றும் கிழக்கு திசையில் தலைவைத்து, வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் கால்வைத்து படுப்பது நல்லது.

வடக்கு பக்கம் யாரும் தலைவைத்து படுக்க கூடாது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள்

கணவன் மனைவி இருக்க கூடிய அறையில் சிங்கிள் ஆக எந்த படங்களோ, பொருட்களோ இருக்க கூடாது. ஜோடியாக இருக்க கூடிய பொருட்கள் தான் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அவர்களுக்குள் காதல், ஒற்றுமை அதிகரிக்கும்.

படுக்கை அறையில் இயற்கைகாட்சிகல், பறவைகள், அருவிகள், குழந்தை படங்கள் போன்றவை வைக்கலாம்.

ஒரு நாளில் சில மணி நேரங்களாவது சூரிய வெளிச்சம் படுக்கையறையில் விழும்படி படுக்கையறையை அமைக்க வேண்டும்.

படுக்கை அறைக்கு காலனி இல்லாமல் செல்வது சிறப்பு

படுக்கை அறையில் எக்காரணத்திற்கொண்டும் செயற்கை பூக்களோ, வாடிய தாவரங்களையோ வைக்க கூடாது. ஏனெனில் இது மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற காரணமாக உள்ளது.

படுக்கையறை கட்டில் ஒழுங்கான வடிவில் இல்லாமல் இருந்தாலோ அல்லது வட்ட வடிவிலோ அல்லது ஓவல் வடிவிலோ இருந்தால், அந்தக் கட்டிலை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சதுரம் அல்லது செவ்வக வடிவ கட்டிலே உறங்குவதற்கு சிறந்தது.

படுக்கையறையின் சீலிங் ஆனது பத்தடி உயரம் இருக்க வேண்டும். அதற்கு குறைவாக இருக்கக் கூடாது.

சீலிங்கில் வெள்ளை நிறம் அல்லது வெளிர் நிறங்களில் பெயின்ட் செய்வது வாஸ்துப்படி நேர்மறை ஆற்றலை ஈர்ப்பதாகவும், மகிழ்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

படுக்கையறைக்கு நீல நிறம் சிறந்தது. உங்கள் படுக்கையறைக்கு நீல நிறத்துடன் கூடிய வண்ணங்களில் பெயின்ட் செய்வது அமைதிப்படுத்தும், ஆற்றலை ஊக்குவிக்கதாகவும் இருக்கும். பச்சை நிற பெயின்ட் பயன்படுத்துவது சமாதான மனநிலையை கொடுக்கும்.

படுக்கையறையை அலங்கரிக்க பழுப்பு வண்ணம் மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களையும் தேர்ந்தெடுக்கலாம். இதுவும் தம்பதிகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

அடர் வண்ணங்களில் உள்ள ஃபர்னிச்சர்களை படுக்கையறையில் பயன்படுத்த வேண்டாம்.

கருப்பு அல்லது அடர் நீல நிறங்களில் பெட்ஷீட், திரைச்சீலைகள், கார்பெட்டுகள் ஆகியவற்றை குழந்தைகளின் படுக்கையறையில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். வாஸ்து முறைப்படி இவை குழந்தைகளுக்கு குழப்பமான மனநிலையை ஏற்படுத்தி உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி