தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலை உறுதிபடுத்துவோம் என உலக சுகாதார தினத்தில் உறுதியேற்போம் – ஹெல்த் டிப்ஸ்

உடலை உறுதிபடுத்துவோம் என உலக சுகாதார தினத்தில் உறுதியேற்போம் – ஹெல்த் டிப்ஸ்

Priyadarshini R HT Tamil

Apr 07, 2023, 11:24 AM IST

இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையாக டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கடைபிடித்து ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோம் என உறுதியேற்போம்.
இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையாக டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கடைபிடித்து ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோம் என உறுதியேற்போம்.

இன்று உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையாக டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதை கடைபிடித்து ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வோம் என உறுதியேற்போம்.

தினமும் எட்டு மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

காலை உணவு கண்டிப்பாக எட்டு மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.

புகைபிடிப்பதால் பல்வேறு உடல் நல கேடுகள் உண்டு என்றாலும், வயது முதிர்ச்சியை இது துரிதப்படுத்துகிறது. சீக்கிரமாக முடி நரைத்து விடுகிறது. தோல்களில் சுருக்கம் ஏற்படுகிறது.

வாரம் இரண்டு முறை எண்ணெய் குளியல் உடல் சூட்டை தணித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

விட்டமின் சி அதிகம் நிறைந்த பழங்கள் வயது முதிர்வை தள்ளி போட உதவுகின்றன.

யோகாசனம், மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் என்றும் இளமையாக வாழலாம். 

குறைந்தது இருபது நிமிடம் உடற்பயிற்சி தினமும் செய்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அப்படி உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டை தேர்ந்தெடுத்து விளையாடலாம். இதனால் வியர்வை மூலம் கழிவு வெளியேறுவதுடன் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது.

இதயத்தை பலமாக வைத்துக்கொள்ள ஒட்டப்பயிற்சி அவசியம். ஒட முடியவில்லை என்றால் வேகமாக நடக்கலாம்.

தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம்.

கந்தையானாலும் கசக்கி கட்டு, கூழானாலும் குளித்து குடி என்ற முன்னோர் வாக்கிற்கு இணங்க, நாம் அன்றாடம் பயன்படுத்தும் உடைகளை துவைத்து உடுத்தி, தினமும் இருவேளை குளித்து சுத்தமாக வைத்துக்கொள்வோம்.

சர்க்கரையை தவிர்த்து பனைவெல்லம், பனங்கற்கண்டு பயன்படுத்துவது நல்லது. 

தினமும் இரு முறை பல் துலக்குவது பல்வேறு வகையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

இரவில் அதிக நேரம் விழித்து இருந்தால் நீங்கள் சீக்கிரமாக வயதான தோற்றத்தை அடைந்து விடுவீர்கள்.

ஆண்டுக்கு இருமுறை பேதி மாத்திரை சாப்பிட்டு குடலை சுத்தப்படுத்தி கொள்வது, மாதம் இரண்டு முறை கணவன், மனைவி உடலுறவில் ஈடுபட்டு, வாரம் இருமுறை எண்ணைய் குளியல் செய்து, நாள் இருமுறை மலம் கழிப்பது வாழ்வை வளமாக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான வழிகளை கடைபிடிப்போம் என உலக சுகாதார தினத்தில் உறுதி பூணுவோம். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி