தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Gram Paniyaram: சத்தான பச்சை பயிறு குழி பணியாரம்.. உடலுக்கு மிகவும் நல்லது!

Green Gram Paniyaram: சத்தான பச்சை பயிறு குழி பணியாரம்.. உடலுக்கு மிகவும் நல்லது!

Nov 15, 2023, 12:15 PM IST

பச்சை பயிறு குழி பணியாரத்தை மிஸ் பண்ணிடாதீங்க
பச்சை பயிறு குழி பணியாரத்தை மிஸ் பண்ணிடாதீங்க

பச்சை பயிறு குழி பணியாரத்தை மிஸ் பண்ணிடாதீங்க

வீட்டில் குழந்தைகளுக்கு எப்போதும் சத்தான உணவு கொடுக்க விரும்பும் நபரா நீங்கள். அப்ப இந்த பச்சை பயிறு குழி பணியாரத்தை மிஸ் பண்ணிடாதீங்க

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

தேவையான பொருட்கள்

பாசி பயிறு

உளுந்து

பூண்டு

இஞ்சி

வெங்காயம்

பச்சை மிளகாய்

உப்பு

கறிவேப்பிலை

மல்லி இலை

சீரகம்

பெருங்காயம்

எண்ணெய்

தேங்காய்

எண்ணெய்

செய்முறை

250 கிராம் பச்சை பயிறு 100 கிராம் உளுந்தை கழுவி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்து கொள்ள வேண்டும்.

8 மணி நேரம் ஊறிய பச்சை பயிறு உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு துண்டு இஞ்சி, மற்றும் 10 பல் வெள்ளை பூண்டை சேர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு ஸ்பூன் பெருங்காயத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் பயிறு ஊற வைத்த தண்ணீரை கொஞ்சமாக சேர்த்து கொர கொரப்பாக இல்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து அதில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் கறிவேப்பிலை மற்றும் மல்லி இலையை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் அரை முடி தேங்காயை துருவி சேர்த்து கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சீரகத்தையும் கசக்கி சேர்த்து கொள்ள வேண்டும். 

அதில் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குழி பணியார கல்லை சூடாக்க வேண்டும். அதில் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் அரைத்த பச்சை பயிறு மாவை சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். பின்னர் பணியாரத்தை திருப்பி போட்டு வேக வேண்டும். விரும்பினால் நெய் ஊற்றி சுடலாம்.

பாசிப்பயிற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. மேலும் புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. இப்பயறானது கண்கள், முடி, நகங்கள், கல்லீரல், சருமம் ஆகியவற்றின் நலத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டம் சீராக நடைபெற உதவுகிறது. உடல் எடையை குறைக்க உதவும். மலச்சிக்கலை போக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த பச்சை பயிறை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி