தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Gram Dhal Adai : வித்யாசமான டிஃபன் ட்ரை பண்ணலாமா? பாசிபருப்பு அடை!

Green Gram Dhal Adai : வித்யாசமான டிஃபன் ட்ரை பண்ணலாமா? பாசிபருப்பு அடை!

Priyadarshini R HT Tamil

Sep 15, 2023, 11:00 AM IST

Green Gram Dhal Adai : பாசிபருப்பு அடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
Green Gram Dhal Adai : பாசிபருப்பு அடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Green Gram Dhal Adai : பாசிபருப்பு அடை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

பாசிபருப்பு – 1 கப்

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

(நன்றாக கழுவி ஓரிரவு அல்லது 4 மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்)

சீரகம் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – சிறிதளவு

இஞ்சி – 2 இன்ச்

பெருங்காயம் – சிறிதளவு

வெங்காயம் – அரை (நறுக்கியது)

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி

(ஸ்டஃப் செய்ய கடாயில் எண்ணெய் தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை கண்ணாடி பதமாகும் வரை வதக்கவேண்டும். பின்னர் அதில் பன்னீர் துருவி சேர்த்து, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ஸ்டஃபிங் உங்களுக்கு தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்)

செய்முறை

நன்றாக ஊறவைத்து அலசிய பாசிபருப்புடன், சீரகம், உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை ஆகிய அனைத்தையும் சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதை நன்றாக தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசைக்கல்லில் சிறுசிறு அடைகளாக வார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை அப்படியே சாம்பார், சட்னியுடன் சாப்பிடலாம்.

அல்லது இதில் ஸ்டஃபிங் செய்தும் சாப்பிடலாம். பன்னீர் புர்ஜி அல்லது உருளைக்கிழங்கு மசால் என எதுவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். மெல்லிசாக வார்த்த அடைகள் இருபுறமும் வெந்த பின், ஒரு புறத்தில் சிறிது கொத்தமல்லிச்சட்னியை அடை முழுவதும் தடவி ஸ்ஃடப் செய்ய வைத்துள்ளதை அதில் பரப்பி, நன்றாக மூடி இருபுறமும் வேக வைத்து எடுத்துக்கொள்ளலாம். இது கூடுதல் சுவையாக இருக்கும். இதற்கும் நீங்கள் சட்னி, சாம்பார் அல்லது குருமா என எதுவேண்டுமோ தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேர சிற்றுண்டி அல்லது இரவு உணவுக்கு எடுத்துக்கொள்ளலாம். உங்கள் வீட்டில் உறவினர்கள் வந்தால் இதை செய்து கொடுத்து அசத்தலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி