தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fish Fry Tips : மசாலா உதிராமல், தவாவில் ஒட்டாமல் மீன் வறுவல் செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்!

Fish Fry Tips : மசாலா உதிராமல், தவாவில் ஒட்டாமல் மீன் வறுவல் செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil

Nov 14, 2023, 01:00 PM IST

Fish Fry Tips : மசாலா உதிராமல், தவாவில் ஒட்டாமல் மீன் வறுவல் செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்!
Fish Fry Tips : மசாலா உதிராமல், தவாவில் ஒட்டாமல் மீன் வறுவல் செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்!

Fish Fry Tips : மசாலா உதிராமல், தவாவில் ஒட்டாமல் மீன் வறுவல் செய்ய வேண்டுமா? இதோ டிப்ஸ்!

எப்படி செய்தாலும் மீன் வறுவல் சுவையாக இருப்பதில்லை. தவாவில் ஒட்டிக்கொள்கிறது. சாப்பிடும்போது பச்சை நாற்றம் வீசுகிறது என்று கவலைப்படுகிறீர்களா? அதற்கு இதோ இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

Diabetes Care : சர்க்கரை நோயால் அவதியா? கோதுமைக்கு பதில் என்ன சாப்பிடலாம்? இதோ ஆலோசனை!

மசாலா ஒரு கோட்டிங்போல் மேலே இருக்கும், தவாவில் சிறிதும் ஒட்டாது, சுவையும் நன்றாக இருக்கும். மீன் நன்றாக வெந்திருக்கும். எந்த மீன் வாங்கினாலும் இந்த முறையில் பின்பற்றி பாருங்கள். நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்

மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – கால் ஸ்பூன் ‘

(கறி மசாலா வாசனையுடன் மீன் சுவையில் அள்ளும்)

இஞ்சி-பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

கடலை மாவு – 2 ஸபூன்

எண்ணெய் – 1

உப்பு- தேவையான அளவு

செய்முறையுடன் டிப்ஸ் 

(கார்ன் ஃப்ளோர், அரிசி மாவு என எதுவும் சேர்க்காமல் கடலை மாவு மட்டும் சேர்த்துக்கொண்டால் மசாலாவை நன்றாக மீனில் ஒட்டவைக்கும். இது மீனுக்கு நல்ல சுவையையும் சேர்த்துக்கொடுக்கும். கடலை மாவு இல்லாவிட்டால் அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு கார்ன் ஃப்ளோர் அல்லது 1 ஸ்பூன் அரிசி மாவும் சேர்த்துக்கொள்ளலாம். கடலை மாவும், கார்ன் ஃப்ளோர் மாவும் சேர்க்கும்போது சுவை மாறாது. மசாலா உதிராமல் இருக்க அவை உதவுகிறது. மொறுமொறு தன்மைக்கும் உதவும். ஆனால் அரிசி மாவு சேர்க்கும்போது கூடுதலாக மசாலாக்கள் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மீனின் சுவை குறைந்துவிடும். எனவே அரிசி மாவு சேர்க்கும்போது உப்பு, காரம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளுங்கள்)

இந்த பொடி அனைத்தையும் சேர்த்து எண்ணெயுடன் பேஸ்டாக்கி, மீனில் இருபுறமும் நன்றாக தடவி அரை மணி நேரம் இருந்தால் கூடுதல் நேரம் கூட ஊறவைத்துக்கொள்ளலாம். அப்போதுதான் மசாலா மீனில் முழுவதுமாக இறங்கியிருக்கும்.

முன்னதான மீனை உப்பு, எலுமிச்சை, மஞ்சள் கலந்த தண்ணீரில் கழுவிவிட்டு பயன்படுத்தவேண்டும்.

தவாவில் எண்ணெய் சேர்த்து பொரித்து எடுக்கும்போது, சோம்பும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கரம் மசாலா சுவையுடன், சோம்பின் சுவையும், மணமும் மீனுக்கு அதிக சுவையை கொடுக்கும்.

அதிக தீயில் வைத்து எண்ணெயை சூடாக்கி மீனை வைத்தவுடன் தீயை குறைத்துவிடவேண்டும். குறைவானது முதல் மிதமானது வரை தீயில் வைத்துக்கொண்டால் மீன் நன்றாக வெந்து வரும். வெளியே நல்ல கிரிஸ்பியாகவும், உள்ளே மிருதுவாகவும் வெந்திருக்கும்.

மீன் வறுக்கும் தவா ஒட்டுகிறது என்றால், கொஞ்ச்ம் கறிவேப்பிலையை அரைத்து மீனில் தடவிவிட்டு வறுக்க வேண்டும். அப்போது ஒட்டாது. இல்லாவிட்டால் கறிவேப்பிலையை நன்றாக பொடித்து தவாவில் சேர்த்துவிட்டு, பின்னர் மீனை வைத்து வறுத்து எடுத்தாலும் ஒட்டாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி