தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  High Cholesterol : உயிருக்கு உலை வைக்கும் கொழுப்பு - இதயத்துக்கு இதமளிக்காத கொலஸ்ட்ரால் - கட்டுப்படுத்தும் உடற்பயிற்சிகள

High Cholesterol : உயிருக்கு உலை வைக்கும் கொழுப்பு - இதயத்துக்கு இதமளிக்காத கொலஸ்ட்ரால் - கட்டுப்படுத்தும் உடற்பயிற்சிகள

Priyadarshini R HT Tamil

Jun 12, 2023, 10:58 AM IST

High Cholesterol : உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது உயிரழப்பை கூட ஏற்படுத்தலாம். எனவே கொழுப்பை குறைக்கும் உணவு வகைகள் என்ன என்று இங்க தெரிந்துகொள்ளலாம்.
High Cholesterol : உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது உயிரழப்பை கூட ஏற்படுத்தலாம். எனவே கொழுப்பை குறைக்கும் உணவு வகைகள் என்ன என்று இங்க தெரிந்துகொள்ளலாம்.

High Cholesterol : உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அது உயிரழப்பை கூட ஏற்படுத்தலாம். எனவே கொழுப்பை குறைக்கும் உணவு வகைகள் என்ன என்று இங்க தெரிந்துகொள்ளலாம்.

கொழுப்பு உடலுக்கு நல்லதல்ல என்று உங்களுக்கு தெரியும். மேலும் கொழுப்பால் உங்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்பதும் தெரியும். அது இறப்பை கூட ஏற்படுத்தும். கொழுப்பு அதிகரிக்க ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்கள் கூட காரணமாக இருக்கும். வாழ்க்கை முறை மாற்றம், குடிப்பழக்கம், மன அழுத்தம், புகை, புகையிலை மற்றும் உடல் பருமன் ஆகியவையும் காரணமாக இருக்கலாம். உங்கள் கொழுப்பை கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சிகள் உதவும். எனவே நாம் மருத்துவர்களின் அறிவுரையைப்பெறுவதும் அவசியம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

கொழுப்பு நம் ரத்தத்தில் அதிகமாகும்போது அது இதய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. உடபயிற்சிகள் மேற்கொள்ளும் பெண்களுக்கு, உடற்பயிற்சி செய்யாத பெண்களைவிட கொழுப்பு குறைவாக உள்ளதை ஆய்வுகள் தெரிவித்தன. இதை கட்டுக்குள் கொண்டுவர வாழ்க்கை முறையில் மாற்றம், ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சிகள் சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஏரோபிக் உடற்பயிற்சிகள், கொழுப்பை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. வேக நடை, மெது ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுவது அல்லது கார்டியோ உடற்பயிற்சிகள் உடலில் கொழுப்பை குறைக்க உதவுகின்றன. 150 நிமிடங்கள் மித பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் வேகமான உடற்பயிற்சி செய்யும்போது கொழுப்பு குறைக்கப்படுகிறது.

கடுமையன உடற்பயிற்சிகளை குறிப்பிட்ட காலத்திற்கு மாற்றி, மாற்றி செய்யும்போது, உடலில் அதிக கொழுப்பு குறைக்கப்படுகிறது. இந்த வகை உடற்பயிற்சிகள் கொழுப்பை குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் உதவுவது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உடற்பயிற்சி எல்லோருக்கும் உகந்தது அல்ல. எனவே மருத்துவரின் அறிவுரையின் பேரில் இந்த உடற்பயிற்சியை செய்யலாம்.

பலத்தை அதிகரிக்கும் பயிற்சி, பளு தூக்குதல் போன்றவை கொழுப்பை குறைக்க உதவும் உடற்பயிற்சியாகும். தசை வளர்சிக்கு உதவும். உடலில் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

யோகா, உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் தீர்வு கொடுக்கும். ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் உதவும். கொழுப்பு அளவை பராமரிக்கவும் உதவும். அதை ஆய்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. சில யோகா, மூச்சுப்பயிற்சி, ஓய்வு எடுப்பது உங்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும். மன அழுத்தமும் உடலில் கொழுப்பு அளவை அதிகரிப்பதில் பெரும் பங்கு வகிப்பது.

வழக்கமான உடற்பயிற்சி, எனவே உடலுக்கு வழக்கமான உடற்பயிற்சிகள் கொடுத்துக்கொண்டே இருப்பது மிக அவசியம். அது உங்கள் உடல்லி கொழுப்பு அளவை குறைக்க உதவும், வீட்டில் செய்யும் வேலைகள், தோட்டப் பராமரிப்பு, படிகளில் நடப்பது போன்றவற்றை செய்யலாம். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதும் கொழுப்பை குறைக்க உதவும்.

அதிக கொழுப்பு இதய பாதிப்பை ஏற்படுத்தி, உயிரிழப்புக்கு வழிவகுக்கும். ஒழுங்கற்ற வாழ்க்கை முறை உங்களை ஆபத்தில் தள்ளும். எனவே உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணரவேண்டும். நல்ல உணவுப்பழக்கம், புகை பிடிக்காமல் இருப்பது, மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, தேவைப்பட்டால் கொழுப்பை குறைக்கும் மாத்திரைகள் மருத்துவரின் பெயரில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி