தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Farming : உழவனின் நண்பன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள மற்றொரு புழு எதுவென்று தெரியுமா? அமெரிக்க ஆராய்ச்சி அசத்தல்!

Farming : உழவனின் நண்பன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள மற்றொரு புழு எதுவென்று தெரியுமா? அமெரிக்க ஆராய்ச்சி அசத்தல்!

Priyadarshini R HT Tamil

Feb 18, 2024, 12:04 PM IST

Farming : உழவனின் நண்பன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள மற்றொரு புழு எதுவென்று தெரியுமா?
Farming : உழவனின் நண்பன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள மற்றொரு புழு எதுவென்று தெரியுமா?

Farming : உழவனின் நண்பன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ள மற்றொரு புழு எதுவென்று தெரியுமா?

மண்புழு தவிர்த்து ஒருவகை உருளைப்புழுவும் (Steinernema adamsi) உழவர்களின் நண்பனே என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

University of California-Riverside ஆய்வாளர்கள் உழவர்களுக்கு பேருதவியாக இருக்கும் புதுவகை உருளைப்புழு (Nematodes) ஒன்றை (Steinernema adamsi) கண்டுபிடித்துள்ளனர்.

அவை இயற்கை பூச்சிக்கொல்லிகளாக செயல்படுவதால், தேவையற்று செயற்கை வேதி பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை தவிர்த்து மண் வளம், இயற்கை சூழல் கெடாமல் (இதனால் மக்கள் நோய்வாய்படாமல்) நீடித்த வேளாண்மை (Sustainable Agriculture) செழித்து வளர உதவி புரிகின்றன.

1920களில் இருந்தே விவசாயிகள் உருளைப்புழுக்களை இயற்கை பூச்சிக்கொல்லிகளாக பயன்படுத்தி வந்தாலும், சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒருவகை உருளைப்புழு (Steinernema adamsi - அமெரிக்க உயிரியல் துறை நிபுணரான Bryon Adams நினைவாக பெயரிடப்பட்டுள்ளது) தாய்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டாலும், அவை மற்ற உருளைப்புழுக்களைப்போல் அல்லாமல் ஈரப்பதம், வெப்பம் மிகுந்த பகுதிகளில் (Warm and Humid climate) எளிதில் வளரும் தன்மை கொண்டுள்ளது. இதை சிறப்பம்சமாக பார்க்க வேண்டும்.

மற்ற உருளைப்புழுக்கள் மேற்சொன்ன சூழலில் (Hot &Humid) எளிதாக வளர்வதில்லை.

ஒரு மில்லி மீட்டர் நீளமும், மனிதர்களின் தலை முடியில் பாதியளவு அகலமும் உள்ள இந்த Steinernema adamsi உருளைப்புழு தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளின் வாய் மற்றும் மலவாய் வழியாக உள்நுழைந்து, தனது மலத்தில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் பாக்டீரியா கிருமிகளை வெளியேற்றி பூச்சிகளுக்குள் செலுத்துவதால், பூச்சிகள் 48 மணி நேரத்திலேயே இறக்கின்றன.

இயற்கை பூச்சிக்கொல்லியாக உருளைப்புழு (Steinernema adamsi) செயல்படுவதால் செயற்கை பூச்சிக்கொல்லிகளின் தேவை தவிர்க்கப்பட்டு நீடித்த வேளாண்மையை, இவை உறுதிசெய்வதால், இவற்றை உழவர்களுக்கு உதவும் சிறு கதாநாயகர்கள் என அழைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

ஒருவகை பூச்சிகளை (Wax Moth) உருளைப்புழுக்கள் கட்டுப்படுத்துவது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதேபோல், மற்ற பூச்சிகளையும், இவை அழிக்கும் திறன்கொண்டவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்பதால், தமிழகம் மற்றும் இந்தியாவிலும் இதை பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். தமிழக மற்றும் இந்திய அரசுகள் செவிசாய்க்குமா?

உருளைப்புழுவையும் விவசாய நண்பனாகக் கருதி அதை பயன்படுத்த முன்வருமா?

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

மண் புழுக்கள் ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகிறது

இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் உள்ளன. மண் புழுக்கள் மண்ணில் அவற்றின் கழிவுகளை வெளியேற்றும், அதனால் மண்ணில் பல நுண்ணுயிரிகள் வளரும். அதனால்தான் மண்ணுக்கு அதன் வாசனை கிடைக்கிறது.

மண்புழுக்கள் மண்ணில் மேல் புறத்தில் இருந்து சுரங்கம் அமைத்துக்கொண்டே செல்லும். இதன் வழியாக நீரும், நைட்ரஜனும் பூமிக்குள் புகுந்து நிலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். இதனால் அந்த நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்காது. மண்ணின் வளத்தை மண்புழுக்கள் பெருக்குகின்றன.

நாம் மண்ணில் மற்ற பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்கும்போது, மண்ணுக்கு நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இயற்கையில் மண் வளம் காக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இதனால் இயற்கைக்கு ஊறு செய்யாத வகையில் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்

அடுத்த செய்தி