தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Biryani Kathirikai: நல்ல பிரியாணிக்கு அசத்தல் கத்தரிக்காய் சைட் டிஷ் செய்ய மறக்காதீங்க!

Biryani Kathirikai: நல்ல பிரியாணிக்கு அசத்தல் கத்தரிக்காய் சைட் டிஷ் செய்ய மறக்காதீங்க!

Aug 31, 2023, 11:30 AM IST

நல்ல பிரியாணிக்கு அதன் சரியான சைட் டிஷ் இந்த கத்தரிக்காய் கறி ருசியாக இருக்கும்.
நல்ல பிரியாணிக்கு அதன் சரியான சைட் டிஷ் இந்த கத்தரிக்காய் கறி ருசியாக இருக்கும்.

நல்ல பிரியாணிக்கு அதன் சரியான சைட் டிஷ் இந்த கத்தரிக்காய் கறி ருசியாக இருக்கும்.

நல்ல பிரியாணிக்கு அதன் சரியான சைட் டிஷ் இந்த கத்தரிக்காய் கறி ருசியாக இருக்கும். இதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை ஒரு ஸ்பூன்

வெள்ளை எள் ஒரு ஸ்பூன்

எண்ணெய்

கடுகு

சீரகம்

வெந்தயம்

மிளகு

வெங்காயம்

தக்காளி

பச்சை மிளகாய்

மிளகாய் தூள்

மஞ்சள் தூள்

கத்தரிக்காய்

புளி

கொத்தமல்லி

கறிவேப்பிலை

உப்பு

செய்முறை

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். கடலை வறுத்த பிறகு அதே கடாயில் ஒரு ஸ்பூன் வெள்ளை எள் சேர்த்து விட வேண்டும். கடாய் சூட்டிலேயே எள் பொரிந்து விடும். ஒரு மிக்ஸி ஜாரில் கடலை எள் இரண்டையும் சேர்த்து பொடி செய்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுந்து சேர்த்து பொரிந்து வரும் போது கொஞ்சமாக சீரகம், வெந்தயம், வெங்காயம், 2 பச்சை மிளகாய் 2 தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் கத்தரிக்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் சேர்க்க வேண்டும். இதில் ஒரு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் கலந்து சேர்த்து கொள்ள வேண்டும்.

கத்தரிக்காய் நன்றாக வெந்து எடுத்த பிறகு அதில் பொடி செய்து வைத்த கடலை மற்றும் எள் பொடியை சேர்த்து திரட்ட விட வேண்டும். இந்த கத்தரிக்காய் பிரியாணிக்கு சரியான காமினேஷன். தோசை இட்லிக்கும் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

இந்த கிரேவியில் விருப்பம்  உடையவர்கள் வெல்லத்தை லேசாக தட்டி சேர்த்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி