தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cabbage Vada : முட்டைகோஸ் வடை செய்வது எப்படி?

Cabbage Vada : முட்டைகோஸ் வடை செய்வது எப்படி?

Aarthi V HT Tamil

Jul 18, 2023, 04:30 PM IST

எளிதாக எப்படி முட்டைகோஸ் வடை செய்வது என பார்க்கலாம்.
எளிதாக எப்படி முட்டைகோஸ் வடை செய்வது என பார்க்கலாம்.

எளிதாக எப்படி முட்டைகோஸ் வடை செய்வது என பார்க்கலாம்.

பெரும்பாலும் மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளிவிட்டு வந்தவுடன் அவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்க வேண்டும். அதை சத்தாக வழங்கினால் இன்னும் நல்லது. வெளியே வாங்கி கொடுக்காமல் வீட்டிலேயே செய்வதால் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். எளிதாக எப்படி முட்டைகோஸ் வடை செய்வது என பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Dindugal Thalapakatti Biriyani : வீட்டிலே செய்யலாம் எளிதாக! திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி செய்வது எப்படி?

Master Health Camp : சென்னை ஸ்டான்லி மருத்துவமனை ‘மாஸ்டர் சுகாதார பரிசோதனையில்’ அதிர்ச்சி தகவல்! காரணம் இதுதான்!

Benefits of Stair Climbing : மாடிகளுக்கு படிகளில் ஏறுவதால் என்ன நன்மைகள்? தெரிஞ்சா இனி லிஃப்ட் பக்கமே போக மாட்டீர்கள்!

Benefits of Aloe Vera Juice : தினமும் கட்டாயம் உங்களுக்கு கற்றாழைச்சாறு! ஏன் என்று தெரிந்தால் விடமாடீர்கள்!

தேவையான பொருள்கள்

உளுத்தம்பருப்பு – 200 கிராம்

கடலைப்பருப்பு - 100 கிராம்

முட்டைக்கோஸ் - 1/2

கடலை மாவு - 1/2 கப்

வேர்க்கடலை - 1/2 கப்

கருப்பு மிளகு - 1/2 தேக்கரண்டி

சோம்பு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி 1/2

மிளகாய் - 2 பச்சை

வெங்காயம் - 1

காரட் - 1

கொத்தமல்லி

சுவைக்கு உப்பு

செய்முறை

முதலில் உளுத்தம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சுத்தம் செய்து 4 முதல் 5 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

இப்போது ஊறவைத்த பருப்பை மிக்ஸி ஜாரில் எடுத்து அதனுடன் சோம்பு, சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

இப்போது நறுக்கிய முட்டைக்கோஸ் , துருவிய இஞ்சி, பச்சை மிளகாய் துண்டுகள், வெங்காயம், கேரட் துண்டுகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

கடலை மாவில் தண்ணீரைச் சேர்த்து சுவைக்கு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக ஒரு ஏர் ஃப்ரை பானில் சிறிது எண்ணெய் தடவி வடையை போட்டு எடுக்கவும்.

அவ்வளவுதான், முட்டைக்கோஸ் பஜ்ஜி தயார். இவற்றை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம் அல்லது மாலை நேர சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி