தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Cracked Heels Home Remedies

Beauty Tips: பெண்களுக்கு சங்கோஜத்தைத் தரும் குதிகால் வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்

I Jayachandran HT Tamil

Apr 30, 2023, 06:16 PM IST

பெண்களுக்கு சங்கோஜத்தைத் தரும் குதிகால் வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு சங்கோஜத்தைத் தரும் குதிகால் வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு சங்கோஜத்தைத் தரும் குதிகால் வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

பெண்களுக்கு பெரிதும் சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம் குதிகால் வெடிப்பு. இதனால் வலியும் வேதனையும் தாங்க முடியாது. இவர்கள் அடிக்கடி தண்ணீரில் புழங்குவதும் காரணமாகும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Glowing Face : இரவில் இரண்டு சொட்டு மட்டும் இதை முகத்தில் தடவவேண்டும்! காலையில் முகம் ஜொலிக்கும்!

Health Mix : ஹார்லிக்ஸ், பூஸ்டுக்கு மாற்று! இப்டி ஒரு ஹெல்த் மிக்ஸ் செஞ்சு பாருங்க! ஆரோக்கியம் உறுதி!

Nail Care: நகங்கள் அழகானவை மட்டும் அல்ல. நம் உடலில் இருக்கும் ஆபத்தை உணர்த்தும் கருவிகள்.. கவனம் முக்கியம் பாஸ்!

Beetroot Poori : பீட்ரூட் பூரி! புசுபுசுன்னு உப்பலா, பிங்க் நிறத்தில் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

குளிர்காலத்தில் குதிகால் வெடிப்பு என்பது பெண்கள் சந்திக்கும் பொதுவான பிரச்னை. இது பாதங்களின் அழகை கெடுக்கும். இதை எளிமையாக வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம்? என்பதை இங்கு பார்ப்போம்.

பெண்களின் குதிகால் வெடிப்பை சரிசெய்ய பேக்குகள்-

அரிசி மாவில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நல்ல கெட்டியான பேஸ்ட் போல் தயார் செய்யவும். அதை குதிகாலில் தடவி, காய்ந்ததும் சுத்தம் செய்யவும். இப்படி வாரத்துக்கு 2 முறை செய்வது நல்ல பலனை தரும். கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நல்ல கெட்டியான பேஸ்ட் போல் தயார் செய்யவும். இந்த பேஸ்ட்டை இரவில் குதிகாலில் தடவி கொண்டு தூங்கவும். இதனால் வெடிப்பு சரியாகி பாதங்கள் மென்மையாக மாறும்.

அரைத்த ஓட்ஸ், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை குதிகாலில் தடவி 20 நிமிடங்கள் காய விடவும். கிளிசரின், தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட்டை தயார் செய்யவும். இதை பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து அப்படியே காய விடவும். பின்பு, அதை சுத்தம் செய்யவும்.

தேனுடன் தேயிலை மர எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பாதங்களில் தடவவும். 20 நிமிடம் கழித்து இதனை ஈரமானதுணியால் சுத்தம் செய்யவும். இதன் பின்பு பாதத்தைச் சுற்றி மாய்ஸ்சரைசரை பூசவும்.

வாழைப்பழத்துடன் தேன் சேர்த்து நன்கு மசித்து அதை பாதங்களில் தடவி 20-30 நிமிடங்கள் வரை காய விடவும். பின்பு அதை சுத்தம் செய்துவிட்டு மாய்ஸ்சரைசரை பூசவும். வாரத்திற்கு 1 முறை இப்படி செய்வது நல்ல பலனை தரும்.

கோதுமை மாவு, தேன் மற்றும் சில துளிகள் வினிகர் சேர்த்து நன்கு கலந்து கெட்டியான பேஸ்ட்டை தயார் செய்யவும். பின்பு, பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் வைத்துவிட்டு கடைசியாக இந்த பேஸ்ட்டை தடவவும். காய்ந்ததும் பாதங்களை சுத்தம் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்