தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Corona Virus : அடுத்தடுத்த மரணங்களும்! அச்சுறுத்தும் கொரோனா ஆய்வும்!

Corona Virus : அடுத்தடுத்த மரணங்களும்! அச்சுறுத்தும் கொரோனா ஆய்வும்!

Priyadarshini R HT Tamil

Dec 13, 2023, 12:00 PM IST

Corona Virus : அடுத்தடுத்த மரணங்களும், அச்சுறுத்தும் கொரோனா ஆய்வும்.
Corona Virus : அடுத்தடுத்த மரணங்களும், அச்சுறுத்தும் கொரோனா ஆய்வும்.

Corona Virus : அடுத்தடுத்த மரணங்களும், அச்சுறுத்தும் கொரோனா ஆய்வும்.

தமிழக பொதுசுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில், 2020 மார்ச் - 2023 மார்ச் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதம் பேர் 2023க்குள் இறந்துபோயுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Gulkand : தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து! ஆற்றல், அமைதி, பாலியல் உணர்வு அதிகரிப்பு என எத்தனை நன்மைகள்!

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

அதில் 20 சதவீதம் இறப்புகள் 61-80 வயதினருள் நடந்துள்ளது. 40 வயது மற்றும் அதற்கு கீழான வயதினருள் 1 சதவீதம் பேர் இறந்துள்ளனர். சென்னை நீங்கலாக 1,220 நோயளிகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 ஆண்டு காலத்திற்குள் 73 பேர் இறந்துள்ளனர்.

இறப்பிற்கு இயற்கை காரணங்கள், கொரோனாவும் பின்னர் வரும் மருத்துவ பிரச்சனைகள் (Long-Covid) காரணமாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், கொரோனா தடுப்பூசி காரணமாக இறப்புகள் நிகழ்ந்ததா? என ஆராயப்படாமல் விடுபட்டுள்ளது ஆய்வின் நோக்கம் மற்றும் முடிவுகள் குறித்த நம்பக்கத்தன்மையை அதிகரிக்கச்செய்கிறது.

குழந்தைகள் மத்தியில் இறப்பின் தாக்கம் குறைவானதாகவும், 10 வயதிற்கு கீழ் உள்ளவர்களில் இறப்பு பெரும்பாலும் இல்லவே இல்லை என்பது புள்ளிவிவரமாக இருந்தும், (கொரோனா தடுப்பூசி 10 வயதினருக்கு கீழ் அதிகமாக கொடுக்கப்படவில்லை) இதை பொதுசுகாதாரத்துறை இயக்குநர் நன்கறிந்தும், கொரோனா தடுப்பூசி காரணமாக இறப்பு நிகழ்ந்ததா? என்ற ஆய்வு அவசியமாவதைதான் அறிவியல் வலியுறுத்துகிறது.

கொரோனா 2ம் அலையில் 60 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும், அவர்களில் 41 சதவீதம் பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்ற புள்ளிவிவரமும் நம்மிடம் உள்ளது.

இறந்தவர்களில் 15.5 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோயும்,13.6 சதவீதம் பேருக்கு உயர் ரத்தஅழுத்தமும் இணை நோய்களாக இருந்தது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பின் 50 சதவீதம் பேருக்கு புற்றுநோய், இரதய செயலிழப்பு (Cardiac failure), தொடை எலும்பு அழுகிப்போதல் (Avascular necrosis of femur) போன்றவை ஆய்வில் கலந்து கொண்டோருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பின்னரே 87 சதவீதம் பேருக்கு தொடை எலும்பு அழுகிப்போதல் (Avascular necrosis of femur) பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. (கொரோனா பாதிப்பின்போது ஸ்டீராய்ட் மாத்திரை தொடர்ச்சியாக எடுக்கப்படும்போது, தொடை எலும்பு அழுகிப்போதல் நிகழ வாய்ப்புள்ளபோது, அது காரணமாக பிரச்சனை எழுந்ததா? என ஆய்வு செய்யப்படாமல் இருந்தது சரியா?)

கொரோனா தொற்றுக்குப் பின் மாரடைப்பு (Heart attack) அதிகமாகியுள்ளது எனக் கூறும் ஆய்வு அது தீடீர் இதய நிற்றல் (Cardiac arrest due to myocarditis which may be vaccine induced கொரோனா தடுப்பூசியும் இதய அழற்சியை எற்படுத்தி இதய நிற்றலுக்கு வித்திட்டு இறப்பை ஏற்படுத்த முடியும்) காரணமாக நிகழ்ந்ததா? என உறுதிசெய்யாமல் விட்டது சரியா?

கொரோனா பாதிப்பிற்குப் பின் மூளை மண்டல பாதிப்பு அதிகமானது எனக் கூறும் ஆய்வு, அது தடுப்பூசி (கோவிஷீல்ட்) காரணமாக எற்பட்ட ரத்த உறைதல் (Clots) ரத்தக் குழாய்களில் ஏற்படும் அழற்சி (Arteritis) காரணமாக நிகழ்ந்ததா? என ஆய்வு செய்யாமல் விட்டது எப்படி சரியாகும்?

கொரோனா பாதிப்பிற்கு பின் 5ல் 1வருக்கு பசிக்குறைவு, அதிக சோர்வு மற்றும் அசதி இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

நீண்ட நாள் கொரோனா பாதிப்பிற்கு கொரோனாவின்போது மருத்துவனை சேர்க்கை,பிராணவாயு தேவைப்பட்டது. அதிக நுரையீரல் பாதிப்பு, செயற்கை சுவாசத்தின் தேவை, இணை நோய்களின் இருப்பு போன்றவற்றுடன் தொடர்புடையதாக இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு, இனிவரும் காலங்களில் கொரோனா சிகிச்சையின்போது எதற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். (உ.ம். இணை நோய் உள்ளவர்கள்) என அரசு தெரிந்து செயல்பட வேண்டும் எனக் கூறினாலும், மேற்கூறிய குறைபாடுகளுடன் ஆய்வை செய்திருப்பது சரியா? என ஆய்வாளர்கள் அல்லவா சிந்தித்து ஆய்வின் குறைபாடுகளை களைய முன்வர வேண்டும்?

மேற்கூறப்பட்ட ஆய்வுபோல் குறைபாடுகளுடன் இருந்தால், அறிவியல் உண்மையை மக்கள் தெரிந்துகொள்ள முடியாமல் போகும் என்பதை அரசு உணர்ந்து, முறையான ஆய்வுகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி