தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Women Health: பெண்களுக்கு அளவற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு

Women Health: பெண்களுக்கு அளவற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கு

I Jayachandran HT Tamil

May 29, 2023, 09:29 PM IST

பெண்களுக்கு அளவற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கின் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்களுக்கு அளவற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கின் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்களுக்கு அளவற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கின் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு பெண்ணின் வயதுக்கு ஏற்ப உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகைய மாறுதல்களை சமாளிக்க ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதுடன் உணவு முறையிலும் கூடுதல் அக்கறை செலுத்தினால் என்றும் ஆரோக்கியத்துடன் நீண்ட காலத்துக்கு வாழலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Gulkand : தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து! ஆற்றல், அமைதி, பாலியல் உணர்வு அதிகரிப்பு என எத்தனை நன்மைகள்!

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

ஆரோக்கியமான உணவுகள் பற்றி பேசுகையில் பெண்களுக்கு நன்மை தரக்கூடிய ஏராளமான உணவுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் சர்க்கரைவள்ளி கிழங்கும் நிச்சயம் இடம்பெறும். இதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

சர்க்கரை வள்ளிக் கழங்கில் நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடெண்ட்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சர்க்கரைவள்ளி கிழங்கை பெண்கள் தங்கள் உணவில் சேர்த்து வர ஒன்றல்ல ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இது பற்றிய தகவல்களை மத்திய அரசின் மருத்துவமனையான இஎஸ்ஐ கார்ப்பொரேஷன் மருத்துவமனையின் உணவியல் நிபுணரான ரித்து பூரியிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

சரும அமைப்பு மேம்படும்-

சரும அமைப்புக்கு வைட்டமின் A மிகவும் அத்தியாவசியமானது. இந்நிலையில் வைட்டமின் A நிறைந்த சர்க்கரை வள்ளி கிழங்கை உங்கள் உணவில் சேர்த்து வர சரும அமைப்பு மேம்படும். இன்று பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் இந்த வைட்டமின் A அல்லது ரெட்டினால் சேர்க்கப்படுகின்றன. இது இளமையான, பளபளப்பான சருமத்தை பெற உதவுகிறது. மேலும் உங்கள் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

இரும்புச்சத்து பற்றாக்குறை தீரும்-

இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் இரும்புச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை பெண்கள் தங்கள் அன்றாட உணவில் தொடர்ந்து சேர்த்து வர, உடலின் ஹீமோகுளோபின் அளவை கணிசமாக அதிகரிக்கலாம். மேலும் பெண்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் இது உதவும். இதன் மூலம் ஞாபக மறதி போன்ற பிரச்னைகளை பெண்கள் தவிர்க்கலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க கர்ப்பிணிகளும் சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாம்.

இனப்பெருக்க ஆரோக்கியம்-

சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்துக்கு நல்லது. இதில் உள்ள வைட்டமின் A கருவுறுதலையும் பெண்களின் இனப்பெருக்க செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. ஆகையால் பெண்கள் தவறாமல் சர்க்கரை வள்ளி கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கருவுறுதலுக்கான வாய்ப்பு அதிகரிக்கும்-

கருத்தரிப்பதில் சிக்கல் அல்லது பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்கள் சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட தொடங்கலாம். இதன் மூலம் கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்.

மன அழுத்தத்தை போக்கும்-

ஆண்களிடம் ஒப்பிடுகையில் பெண்களே மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அலுவலக வேலை முதல் வீட்டு வேலை வரை பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் உண்டாகிறது. சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள மெக்னீசியம் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவுகிறது. ஆகையால் மன அழுத்தத்திலிருந்து விடுபட நினைக்கும் பெண்கள் சர்க்கரை வள்ளி கிழங்கை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த செய்தி