தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ashoka Halwa: திருவையாறு இசைக்கு மட்டுமல்ல இப்படியொரு அற்புத அல்வாவுக்கும் பிரபலம்!

Ashoka Halwa: திருவையாறு இசைக்கு மட்டுமல்ல இப்படியொரு அற்புத அல்வாவுக்கும் பிரபலம்!

I Jayachandran HT Tamil

May 05, 2023, 06:29 PM IST

திருவையாற்றில் சிறப்பாக விளங்கும் ஸ்பெஷல் அசோகா அல்வா பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
திருவையாற்றில் சிறப்பாக விளங்கும் ஸ்பெஷல் அசோகா அல்வா பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

திருவையாற்றில் சிறப்பாக விளங்கும் ஸ்பெஷல் அசோகா அல்வா பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

அல்வா என்றாலே அது திருநெல்வேலி அல்வா என்று மார்தட்டிக் கொள்பவர்களுக்கு ஒரு செய்தி. திருவையாற்றின் அடையாளமாக ஒரு ஸ்பெஷல் அல்வா இருக்கிறது. திருவையாறு தியாகராயரின் இசைக்கு மட்டுமல்லாமல் இந்த அல்வாவுக்கும் பிரபலம் என்று நிரூபித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Late Night Eating Problems : நட்டநடு ராத்திரியில் உணவு சாப்பிடுபவரா? அச்சச்சோ அதனால் ஏற்படும் பாதிப்புகளை பாருங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Benefits of Gulkand : தினமும் ஒரு ஸ்பூன் ரோஜா குல்கந்து! ஆற்றல், அமைதி, பாலியல் உணர்வு அதிகரிப்பு என எத்தனை நன்மைகள்!

Dry Fruits Laddu : தினமும் இதை மட்டும் ஒரு உருண்டை சாப்பிடுங்க! 15 நாளில் முடி உதிர்வது முற்றிலும் சரியாகும்!

அதுதான் அசோகா அல்வா. இது தஞ்சை ஜில்லா முழுவதுமே மக்களால் விருப்பமாக சாப்பிடப்படுகிறது.

நெல்லை அல்வாவுக்கும் திருவையாறு அசோகா அல்வாவுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், நெல்லை அல்வா கோதுமையிலும், அசோகா அல்வா பாசிப்பருப்பிலும் செய்யப்படுகிறது. அசோகா அல்வாவில் நெய் சேர்க்கப்படுவதில்லை.

இந்த இரண்டு அல்வாக்கள் தவிர வட இந்தியாவில் செய்யப்படும் சூஜி அல்வா தொடங்கி, காசி அல்வா, மன்னார்குடி அல்வா, மஸ்கோத் அல்வா, பீமபுஷ்டி அல்வா, கேரட் அல்வா, ஆப்பிள் அல்வா, பீட்ரூட் அல்வா என பல ரகங்கள் உண்டு.

மற்ற எல்லா அல்வா செய்முறையைக் காட்டிலும் அசோகா அல்வா செய்வது மிக மிக சுலபம். குறைவான பொருட்கள் மட்டுமே இதற்கு தேவைப்படுகிறது. வீட்டிலேயே அசோகா அல்வா செய்ய நினைப்பவர்களுக்கு அதன் செய்முறையை இங்கு பார்க்கலாம்.

அசோகா அல்வா செய்யத் தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1/2 கப்

நெய் - 1/2 கப்

சர்க்கரை – 1 கப்

முந்திரி – சிறிதளவு

கோதுமை மாவு – 2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி - சிறிதளவு

அசோகா அல்வா செய்முறை-

முதலில் பாசிப்பருப்பை அலசி குக்கரில் 4 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.

பின்பு பாசிப்பருப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்து திக்கான கலவையாக எடுத்து கொள்ளவும்.

இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரி பருப்புகளை வறுத்து எடுக்கவும்.

பின்பு அதே கடாயில் கோதுமை மாவு சேர்த்து 2 நிமிடம் வறுத்து அதில் அரைத்து வைத்துள்ள பாசிப்பருப்பைச் சேர்த்து நன்கு கிளறவும்.

2 நிமிடம் கழித்து இப்போது அதில் சர்க்கரையை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறவும்.

கலவை கெட்டி பதத்தை அடைந்ததும் அதில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி விடவும்.

குழந்தைகளைக் கவர, ஃபுட் கலர் சேர்க்கலாம். ஆரஞ்சு நிற ஃபுட் கலரை சேர்த்து அல்வாவை பக்குவமாய் கிளறவும்.

இறுதியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து கிளறி சுடச்சுட இறக்கினால் சுவையான அசோகா அல்வா தயார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி