தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yogi Babu: ‘கோபமாக பணியாற்றுவார்’ - தங்கர் பச்சான் குறித்து யோகி பாபு

Yogi Babu: ‘கோபமாக பணியாற்றுவார்’ - தங்கர் பச்சான் குறித்து யோகி பாபு

Aarthi V HT Tamil

Jan 17, 2023, 10:10 AM IST

Yogi Babu About Thangar Bachan: இயக்குநர் தங்கர் பச்சான் படப்பிடிப்பில் வேகமாகவும், கோபமாகவும் பணியாற்றுவார் என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
Yogi Babu About Thangar Bachan: இயக்குநர் தங்கர் பச்சான் படப்பிடிப்பில் வேகமாகவும், கோபமாகவும் பணியாற்றுவார் என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

Yogi Babu About Thangar Bachan: இயக்குநர் தங்கர் பச்சான் படப்பிடிப்பில் வேகமாகவும், கோபமாகவும் பணியாற்றுவார் என நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

தங்­கர் பச்­சான் இயக்­கத்­தில் உரு­வா­கும் புதிய படம், கரு­மே­கங்­கள் கலை­கின்­றன. இதில் நடித்துள்ள யோகி­ பாபு, மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர் பச்சானுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Karthigai Deepam: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா - கார்த்திகை தீபம் அப்டேட்!

Star Movie: 'பகலிலும், மதியத்திலும் ஸ்டார் ஒளிர்கிறது' - இயக்குநர் இளன் நெகிழ்ச்சி!

Ranjithame Show: நம்ம கயல் ஜெயிச்சிட்டாங்க.. ரஞ்சிதமே வெற்றியாளரான சைத்ரா ரெட்டி!

Actress Died in Accident: ஹைதராபாத் அருகே சாலை விபத்தில் சிக்கி பிரபல டிவி நடிகை உயிரிழப்பு! நடிகை உறவினர் பலத்த காயம்

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவருக்கும் வணக்கம். கருமேகங்கள் கலைகின்றன படத்தின் என்னுடைய காட்சிகள் முடிவடைந்தன. இயக்குநர் ஜாம்பவான் பாரதிராஜா , இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் , அதிதி பாலன் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்திது இருக்கிறார்கள். இவர்கள் அனைவருடனும் நடித்தது மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. ஏனென்றால், அனைவருமே மேதைகள். படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு காரணம் தங்கர் பச்சான் தான். நாம் மறந்த வாழ்க்கையெய் நினைவிற்கு கொண்டு வருபவர் தங்கர் பச்சான் .

பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, அழகி, சொல்ல மறந்த கதை, அப்பாசாமி போன்ற அவர் இயக்கிய அனைத்து படங்களுமே வெற்றி பெற்ற படங்கள் தான்.

இந்த முறையில் எங்களை வைத்து ஒரு குடும்ப கதை எடுத்திருக்கிறார். அவருடன் பயணித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்தடுத்து பயணிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. வேகமாக, அதே நேரத்தில் கோபமாகவும் பணியாற்றுவார். அப்பதான் வேலைகள் கரெக்டாக நடக்கிறது. ஆனால், மற்ற நேரத்தில் எல்லோருடனும் மகிழ்ச்சியாகவும் இருப்பார். அவருடன் பணியாற்றியதில் நிறைய அனுபவம் கிடைத்திருக்கிறது.

படத்தின் இசையை ஜிவி பிரகாஷ் அமைத்திருக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவு ஜாம்பவான் ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

குறிப்பாக குழந்தை நட்சத்திரமாக சாரல் என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். அந்தப் பெண்ணை சுற்றி தான் படத்தின் கதை இருக்கும். படத்தின் இறுதிவரை எனது பாத்திரம் நகைச்சுவையாகத் தான் இருக்கும்.

இது போன்ற நல்ல நல்ல கதைகளோடும், நல்ல குழுக்களோடும் நடிப்பதற்கு சந்தோஷமாக தான் இருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் என்னை நடிக்க வைத்த தங்கர் பச்சானுக்கு  நன்றி. அனைவருக்கும் கருமேகங்கள் கலைகின்றன குழு சார்பாக பொங்கல் நல் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி