தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayanthara Vignesh Shivan: நயன் விக்கி திருமண காட்சிகள் வெளியாகுமா.. நெட்பிளிக்ஸ் எடுத்த முடிவு?

Nayanthara Vignesh Shivan: நயன் விக்கி திருமண காட்சிகள் வெளியாகுமா.. நெட்பிளிக்ஸ் எடுத்த முடிவு?

Oct 05, 2023, 11:07 AM IST

இதனால் திருமண வீடியோவில் நெட்பிளிக்ஸின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் காலதாமதத்தை கருத்தில் கொண்டு வீடியோவை வெளியிட வேண்டாம் என முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிய நிலையில் அந்த வீடியோ வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

கடந்த ஆண்டு ஜூன்9ம் தேதி விக்னேஷ் சிவன் நயன் தாரா இருவரும் திருமணம் செய்தனர். இந்த திருமணம் திரை உலகில் பிரம்மாண்டமாகப் பார்க்கப்பட்டது. அதே சமயம் குறிப்பிட்ட சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டதால் நயன் தாராவின் ரசிகர்கள் திருமணம் குறித்த காட்சிகள் எப்போது வெளியாகும் என்று காத்திருந்தனர். திருமணத்தின் போது கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தது. மேலும் திருமணத்திற்கு வந்தவர்களிடம் பவுன்சர்கள் நடந்து கொண்ட விதம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணம் முடிந்த உடன் ஒரு சில படங்கள் மட்டும் வெளியானது.

இதற்கிடையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை நெட்பிளிக்ஸ் வாங்கிய நிலையில் அதை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கினார். ஆனால் நயன் விக்கி திருமணம் நடந்து ஒன்றரை வருடங்கள் ஆக போகிறது. அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது. சமீபத்தில் பிரம்மாண்டமாக முதல் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடும் அதிருப்தியில் உள்ளது.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திருமண வீடியோவில் நெட்டிபிளிக்ஸ் நிறுவனத்திற்கு பெரிதாக பிடிப்பு இல்லாமல் போய் விட்டது. ஜாவன் பட பிரபலங்கள் தான் இந்த விழாவில் பெரிதும் கலந்து கொண்டனர். அது தவிர வந்தது மிகச் சில பிரபலங்கள்தான். அவர்களும் கொரோனா காரணமான மாஸ்க் போட்டு இருந்தனர்.

இதனால் திருமண வீடியோவில் நெட்பிளிக்ஸின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் நெட்பிளிக்ஸ் காலதாமதத்தை கருத்தில் கொண்டு வீடியோவை வெளியிட வேண்டாம் என முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நயன் விக்கி எதிர்பார்த்த லாபம் கிடைக்காது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்திகள் நயன் தாராத ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி