தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: ‘அடுத்த ஆதிகுணசேகரன் யார்?’ தேடுதல் பட்டியலில் கடைசியாக 6 பேர்!

Ethirneechal: ‘அடுத்த ஆதிகுணசேகரன் யார்?’ தேடுதல் பட்டியலில் கடைசியாக 6 பேர்!

Sep 13, 2023, 11:24 AM IST

RIP Marimuthu: ‘வேலராமமூர்த்தி சினிமாவில் பிஸியாக இருப்பதால், தேதி வழங்குவதில் அவருக்கு சிக்கல் இருப்பதாக அவரே நேரடியாக தெரிவித்துவிட்டார்’
RIP Marimuthu: ‘வேலராமமூர்த்தி சினிமாவில் பிஸியாக இருப்பதால், தேதி வழங்குவதில் அவருக்கு சிக்கல் இருப்பதாக அவரே நேரடியாக தெரிவித்துவிட்டார்’

RIP Marimuthu: ‘வேலராமமூர்த்தி சினிமாவில் பிஸியாக இருப்பதால், தேதி வழங்குவதில் அவருக்கு சிக்கல் இருப்பதாக அவரே நேரடியாக தெரிவித்துவிட்டார்’

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் தூணாக இருந்த ஆதிகுணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து, கடந்த வாரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது இழப்பு, ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைச் செய்தது. 

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

யார் இனி அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடத்துவார்கள் என்கிற குழப்பமும் ஏற்பட்டது. மாரிமுத்து டப்பிங் பேசிய வரை எபிசோடுகள் முடிந்து விட்ட நிலையில், அவரை வைத்து எடுத்த மற்ற எபிசோடுகளும் தற்போதும் ஒளிபரப்பாகி வருகின்றன. 

ஆனால், வேறு ஒருவர் குரலில் டப்பிங் செய்யப்பட்டு அவை ஒளிரப்பாகி வருகின்றன. என்ன இருந்தாலும், மாரிமுத்துவின் குரல் இல்லாமல், அது பெரிதாக எடுபடவில்லை. மாரிமுத்துவின் குரல் தான், அந்த கதாபாத்திரத்திற்கே வலு சேர்த்தது என்பதால், அந்த குறையை எளிதில் காண முடிகிறது. 

மாரிமுத்து இடத்தை எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியை வைத்து ஈடு செய்ய இயக்குனர் திருச்செல்வம் திட்டமிட்டார். ஆனால், வேலராமமூர்த்தி சினிமாவில் பிஸியாக இருப்பதால், தேதி வழங்குவதில் அவருக்கு சிக்கல் இருப்பதாக அவரே நேரடியாக தெரிவித்துவிட்டார். இதனால், அவர் ஆதி குணசேகரான வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதே நேரத்தில் அவரை சமரசம் செய்யும் முயற்சிகளும் நடக்கிறது. அதே போல, இயக்குனர் பார்வையில் இன்னும் சிலர் உள்ளனர். அவர்களின் விபரம் இதோ:

இளவரசு:

நடிகர் இளவரசு மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர். மதுரை தமிழை நன்கு பேசக்கூடியவர். வில்லன், காமெடி என இரண்டிற்கும் பொருத்தமானவர்.

பொன்வண்ணன்: 

கிராமிய படங்களில் அதிகம் நடித்தவர். மதுரை தமிழ் இவருக்கும் சரளம். வில்லன், காமெடி கதாபாத்திரங்கள் இவருக்கும் கை வந்த கலை.

நரேன்:

ஆடுகளம், சுந்தரபாண்டியன் படத்திற்குப் பின் நிறைய தென்மாவட்ட படங்களில் நடித்தவர். காமெடி, வில்லன் என இரு கதாபாத்திரங்களும் அவருக்கு இயல்பாக வரும். 

ரோபோ சங்கர்:

மதுரைக்காரர், இயல்பாக மதுரை தமிழ் பேசுபவர். தோற்றம் ஓகே. ஆனால், வில்லத்தனம் கொஞ்சம் சிரமம். மற்றபடி காமெடி இவருக்கு சொல்ல வேண்டியதில்லை.

தம்பி ராமையா: 

அக்மார்க் மதுரை மொழி பேசக்கூடியவர். கிட்டத்தட்ட மாரிமுத்து கதாபாத்திரத்திற்கு எல்லா வகையிலும் பொருத்தமானவர். ஆனால் சினிமாவில் பிஸி என்பதால், சின்னத்திரையில் நேரம் ஒதுக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

ரவி மரியா:

உடல் மொழி, வாய் மொழி அனைத்திலும் தனித்துவம் கொண்டவர். வில்லத்தனத்தையும், அதையே காமெடி கலந்தும் பேசக் கூடியவர். இவருக்கும் சினிமா மட்டுமே மைனஸ். 

மேலே சொன்ன அனைவரும் மறைந்த மாரிமுத்துவின் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாவே தெரிகிறார்கள். இவர்களை தவிர இன்னும் சிலரும் இயக்குனர் பார்வையில் இருக்கிறார்கள். யார் இறுதியில் உறுதியாகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி