தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Viswasam Remake: தெலுங்கில் ரீமேக்காகும் விஸ்வாசம்… ஹீரோ யார் தெரியுமா?

Viswasam Remake: தெலுங்கில் ரீமேக்காகும் விஸ்வாசம்… ஹீரோ யார் தெரியுமா?

Aarthi V HT Tamil

Jan 19, 2023, 01:06 PM IST

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது.

சுயமுயற்சியால் திரையுலகிற்கு வந்து குறுகிய காலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தவர் ஹீரோ மெகாஸ்டார் சிரஞ்சீவி. இவர் ரீ-என்ட்ரிக்குப் பிறகு ஜெட் வேகத்தில் படங்களைத் தயாரித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Fact check: தீபிகா, ரன்வீர் சிங் குழந்தையின் சோனோகிராம் வைரல் புகைப்படம் உண்மையா? இத தெரிஞ்சுக்கோங்க!

Chef Venkatesh Bhat: ‘எனக்கு நன்றி கடன் முக்கியம் அதனால்தான்’ .. கடைசி நேரத்தில் காலை வாரிய தாமு! - வெங்கடேஷ் பட் பளார்

Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

தற்போது, ​​மற்றொரு ரீமேக் படத்தை இயக்க சிரஞ்சீவி பச்சைக் கொடி காட்டியுள்ளார் என்ற செய்தி தற்போது படக்குழு வட்டாரங்களில் இருந்து லீக்காகி உள்ளது. 

சிரஞ்சீவி நடிப்பில் பொங்களுக்கு வெளியான திரைப்படம் வால்டர் வீரய்யா. இந்த படத்தில் சிரஞ்சீவி அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.  இந்த படத்தில் சிரஞ்சீவி இளமையாகவே காணப்படுகிறார். 

பாபி இயக்கிய இந்தப் படத்தில் ரவி தேஜாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூல் அமோகமாக உள்ளது. 

சிரஞ்சீவி கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘போலா சங்கர்’ படத்தை தொடங்கினார் என்பது தெரிந்ததே. தமிழில் ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்தப் படத்தை மெஹர் ரமேஷ் இயக்குகிறார். 30 சதவீத படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிரஞ்சீவி மீண்டும் கலந்து கொண்டார்.

இவர் தற்போது மேலும் சில திட்டங்களை தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் ஏற்கனவே சில இளம் இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இந்நிலையில் தமிழில் சூப்பர் ஹிட்டான ‘விஸ்வாசம்’ படத்தை ரீமேக் செய்ய மெகா ஸ்டார் சிரஞ்சீவி முடிவு செய்துள்ளார். இந்தப் பொறுப்புகளை அவர் மூத்த இயக்குநர் வி.வி.விநாயகிடம் ஒப்படைத்துள்ளார்.

 இந்த கதையில் இயக்குநர் மாற்றங்களை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இவர்களின் கூட்டணியில் 'தாகூர்' மற்றும் 'கைதி நம்பர் 150' ஆகிய படங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

அஜித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு இயக்குநர் சிறுத்தை சிவா எழுதி இயக்கிய படம் விஸ்வாசம். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் இசையமைப்பாளர் டி இமான் படத்தின் இசைக்காக தேசிய விருதை வென்றார். விஸ்வாசம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலித்தது.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி