தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடல் - கெளதம் மேனனுக்கு தோள் கொடுத்த லோகேஷ்! - வீடியோ!

Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் ‘ஹிஸ் நேம் இஸ் ஜான்’ பாடல் - கெளதம் மேனனுக்கு தோள் கொடுத்த லோகேஷ்! - வீடியோ!

Jul 19, 2023, 11:20 AM IST

டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம் எனக்குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அண்மையில் இந்தப்படத்தில் இருந்து 2 - வது பாடலான ஹிஸ் நேம் ஜான் பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

நடிகர் விக்ரமின் நடிப்பில் இயக்குநர் கவுதம் வாசு தேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான ‘ஒரு மனம்’ பாடலும் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து இருந்தது. ஆனால் அதன் பின்னர் என்னவென்று தெரியவில்லை, படம் குறித்தான எந்த அப்டேட்டும் வெளியாக வில்லை.

இதனிடையே கெளதம் மேனன் ஒரு பக்கம், விக்ரம் இன்னொரு பக்கம் என தத்தமது வேலைகளை பார்க்க போய் விட்டார்கள். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்துக்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம் எனக்குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அண்மையில் இந்தப்படத்தில் இருந்து 2 - வது பாடலான ஹிஸ் நேம் ஜான் பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது அந்தப்பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தப்பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் அந்தப்பதிவில், ‘ஹிஸ் நேம் ஜான்’ லிரிக்கல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு இருக்கும் சிலவற்றிற்காக நாம் காத்திருப்பது மதிப்பு வாய்ந்ததே’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி