தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Antony: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ - குட் நியூஸ் சொன்ன விஜய் ஆண்டனி!

Vijay Antony: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ - குட் நியூஸ் சொன்ன விஜய் ஆண்டனி!

Aarthi V HT Tamil

Feb 02, 2023, 12:43 PM IST

நடிகர் விஜய் ஆண்டனி தான் 90% குணமடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி தான் 90% குணமடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி தான் 90% குணமடைந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்று வந்தது. லங்காவி தீவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின் போது படகு விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

HBD K. Jamuna Rani: 6,000 பாடல்கள் பாடியவர்.. பல ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஜமுனா ராணி பிறந்த நாள்

Tamannaah Bhatia: படுக்கையறை காட்சியில் நடிக்க பயப்படும் நடிகர்கள்.. காரணத்தை விளக்கிய தமன்னா

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

இந்த விபத்தில் சுயநினைவை இழந்த விஜய் ஆண்டனி முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டதோடு தாடை, பற்களும் உடைந்தன. உடனே மீட்டு முதலில் மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை செய்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து அவரை இரண்டு வாரம் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”அன்பு இதயங்களே… நான் 90% குணமடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.

என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பை விட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு உள்ளார். இவர் வெளியிட்ட பதிவால் விஜய் ஆண்டனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

முன்னதாக விஜய் ஆண்டனி தன் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தம்ப்ஸ் அப் காண்பித்த படி ட்வீட் செய்து இருந்தார்.

அதில், ” எனக்கு மேலும் ஒரு பெரிய அறுவை சிகிச்சை இப்போது தான் முடிந்தது. கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் நான் பேசுகிறேன் ” என்றும் பதிவிட்டு இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி