தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Benny Dayal: பின் மண்டையை பதம் பார்த்த ட்ரோன்; சுருண்டு விழுந்த பென்னி தயாள்!

Benny Dayal: பின் மண்டையை பதம் பார்த்த ட்ரோன்; சுருண்டு விழுந்த பென்னி தயாள்!

Mar 04, 2023, 01:20 PM IST

தனியார் கல்லூரியில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாளை ட்ரோன் கேமாரா தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது
தனியார் கல்லூரியில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாளை ட்ரோன் கேமாரா தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

தனியார் கல்லூரியில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாளை ட்ரோன் கேமாரா தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருபவர் பாடகர் ‘பென்னி தயாள்’. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என 19 க்கும் மேற்பட்ட மொழிகளில், 3500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர் அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

அப்போது நிகழ்ச்சியை படம் பிடித்துக்கொண்டிருந்த ட்ரோன் கேமரா அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு வந்தது. ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக அது பென்னி தயாளின் தலையில் மோதியது.

தலையில் ட்ரோன் விசிறிகள் பட்டவுடன் பென்னி அப்படியே தலையை பிடித்து மேடையில் உட்கார்ந்து விட்டார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பென்னி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

அந்த வீடியோவில் அவர் பேசும் போது, “ தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் எனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்து நீங்கள் என் மீது காட்சிய அக்கறைக்கு முதலில் நன்றி. முதலில் அன்று என்ன நடந்தது என்பதை நான் சொல்கிறேன். ட்ரோன் கேமாராவில் உள்ள விசிறிகள் என்னுடைய பின்னந்தலையில் வந்து மோதியது. அதனை தடுக்க முயன்ற போது என்னுடைய இரு விரல்களிலும் காயம் ஏற்பட்டது. நான் இப்போது நலம்பெற்று வருகிறேன். இந்த சம்பவத்தின் வாயிலாக நான் 3 விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

1. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் நிகழ்ச்சி ஏற்பட்டாளரிடம் ட்ரோன்கள் உங்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி,அந்த விதிமுறையை ஒப்பந்தத்தில் சேர்க்க சொல்லுங்கள்.

2. சான்றிதழ் பெற்ற தொழில்முறை ஆபரேட்டர்களை மட்டுமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும்.

3. இந்த செய்தி, ட்ரோன் ஆபரேட்டர்களுக்கு நாங்கள் வெறும் பாடகர்கள்தான்; நாங்கள் விஜய்யோ, அஜித்தோ, சல்மான் கானோ அல்ல.. ஆகையால் நீங்கள் மிகவும் நார்மலாகவே எங்களை ஷீட் செய்யலாம்” என்று அதில் பேசியிருக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி