தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ethirneechal: புதிய உச்சம் பெற்ற எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி; ஷாக் அடிக்கும் வளர்ச்சி!

Ethirneechal: புதிய உச்சம் பெற்ற எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி; ஷாக் அடிக்கும் வளர்ச்சி!

Marimuthu M HT Tamil

Oct 12, 2023, 05:02 PM IST

எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி, பிக்பாஸ் டிஆர்பியை விட அதிகம் பெற்றுள்ளது.
எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி, பிக்பாஸ் டிஆர்பியை விட அதிகம் பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலின் டி.ஆர்.பி, பிக்பாஸ் டிஆர்பியை விட அதிகம் பெற்றுள்ளது.

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது இறப்புக்குப்பின் எதிர்நீச்சல் சீரியலில் யார் அடுத்த ஆதிகுணசேகரன் என்னும் கேள்வி எழுந்தது. அப்போது, வெள்ளித்திரை நடிகரும் எழுத்தாளருமான வேலராமமூர்த்தி, ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

இந்நிலையில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 இரவு 9.30 மணிக்குத் தொடங்குவதால் நல்ல டி.ஆர்.பியினைத் தரும் எதிர் நீச்சல் சீரியல் அடிவாங்கும் என நினைத்த சன் டிவி தயாரிப்புக்குழுவினர், சீரியல் நேரத்தை இரவு 9 மணிக்காக மாற்றினர். பின், அந்த 9 மணியில் ஒளிபரப்பான தொடர்களில் நடிகர் வேலராமமூர்த்தி, ஆதி குணசேகரனாக நடித்து பட்டையைக் கிளப்பியிருந்தார். ஆனால் மாரிமுத்துவின் நக்கல் அவரிடம் வெளிப்படவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருந்த டி.ஆர்.பி பட்டியலில், எதிர் நீச்சல் சீரியல் 11.54 புள்ளிகளைப் பெற்று இருக்கிறது. இது முந்தையவாரங்களைவிட மிக அதிகம். குறிப்பாக, பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியே 4.17 புள்ளிகளைத்தான் பெற்றுள்ளது.

இதற்கு புதிய ஆதி குணசேகரனாக வரும் வேல ராமமூர்த்தியின் நடிப்பு எவ்வாறு இருக்கப்போகிறதோ எனப் பலரும் பார்த்ததே கருத்து வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி