தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siva Narayana Moorthy Passed Away: நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்

Siva Narayana Moorthy passed away: நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்

Karthikeyan S HT Tamil

Dec 07, 2022, 11:54 PM IST

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் சிவ நாரயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் சிவ நாரயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் சிவ நாரயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவ நாரயணமூர்த்தி (67). மறைந்த இயக்குநரும் நடிகருமான விசு மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவ நாராயணமூர்த்தி. இவருடைய முதல் படம் பூந்தோட்டம்.

ட்ரெண்டிங் செய்திகள்

KamalHaasan: ‘சென்னை சொந்தம்.. இந்தியன் 2 அப்படி இருக்கும்.. தோனியிட்ட பிடிச்ச விஷயம் இது..’: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் முகம் காட்டி வந்த சிவ நாராயணமூர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் உட்பட பலரின் படங்களில் நடித்திருக்கிறார்.

200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் இன்று (டிச.7) இரவு மரணமடைந்துள்ளார். இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.

மறைந்த சிவ நாரயணமூர்த்தியின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் நடைபெறவுள்ளது. சிவ நாரயண மூர்த்தியின் இறப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவருடைய மறைவு செய்தியை கேள்வி பட்டு தமிழ் திரையுலகத்தினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி