தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Uma Ramanan : பாடகி உமா ரமணன் டாப் 10 ஹிட் தமிழ் பாடல்கள்.. பூங்கதவே தாள் திறவாய் முதல் ஆனந்த ராகம் வரை!

RIP Uma Ramanan : பாடகி உமா ரமணன் டாப் 10 ஹிட் தமிழ் பாடல்கள்.. பூங்கதவே தாள் திறவாய் முதல் ஆனந்த ராகம் வரை!

Divya Sekar HT Tamil

May 02, 2024, 09:29 AM IST

RIP Uma Ramanan : பிரபல பாடகியான உமா ரமணன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 72. அவர் பாடிய டாப் 10 பாடல்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
RIP Uma Ramanan : பிரபல பாடகியான உமா ரமணன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 72. அவர் பாடிய டாப் 10 பாடல்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

RIP Uma Ramanan : பிரபல பாடகியான உமா ரமணன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 72. அவர் பாடிய டாப் 10 பாடல்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

 உமா ரமணன் சென்னை அடையாறில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் நேற்று மாலை காலமானார். அவரின் மறைவு இசை ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அவர் பாடிய டாப் 10 பாடல்கள் குறித்து இதில் பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

GV Prakash, Saindhavi: "ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும்.. இனியும் இது தொடரும்" - சைந்தவி போட்ட திடீர் போஸ்ட்!

Ilaiyaraja Symphony: 35 நாள்களில் சிம்பொனி இசை..! விடியோ மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த இளையராஜா

Lekha Washington: பாலிவுட் நடிகருடன் டேட்டிங்! ரெமாண்டிக் புகைப்படம் பகிர்ந்து ரிலேஷன்ஷிப்பை உறுதி செய்த லேகா வாஷிங்டன்

”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி

ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி(2)

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி

இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி தென்றல் போல நீ ஆடடி

மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி தெய்வப் பாசுரம் பாடடி”இளையராஜா இசையில் வாலி வரிகளில் மகா நதி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், உமா ரமணன் இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

”ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட

உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ” இளையராஜா இசையில் அரங்கேற்ற வேளை என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

”இது என்ன இது என்ன புது உலகா

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா

உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா

கருப்பையில் காதல் கருவுருமா

வரவும் செலவும் இதழில் நிகழும்

உனதும் எனதும் நமதாய் தெரியும்” ஸ்ரீகாந்த் தேவா இசையில் சிவகாசி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலைஹரிஷ் ராகவேந்திரா

மற்றும் உமா ரமணன் இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

”பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே

நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே

மேக மழை நீராட தோகை மயில் வாராதோ” இளையராஜா இசையில் தூறல் நின்னு போச்சு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

”பூங்கதவே தாள் திறவாய்

பூங்கதவே தாள் திறவாய்

பூவாய் பெண் பாவாய்

பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும்

ஆசைக் கனவுகள் ஊர்கோலம்

ஆஹா ஹா ஆனந்தம்

ஆடும் நினைவுகள் பூவாகும்” இளையராஜா இசையில் நிழல்கள் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை உமா ரமணன் மற்றும் தீபன் சக்கரவர்த்தி இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

”ஆனந்த ராகம் கேட்கும் காலம்

ஆனந்த ராகம் கேட்கும் காலம்

கீழ் வானிலே, ஒளி போல் தோன்றுதே

ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ

ஆனந்த ராகம் கேட்கும் காலம்”இளையராஜா இசையில் வைரமுத்து வரிகளில் பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை உமா ரமணன் பாடி இருப்பார்.

”நீ பாதி நான் பாதி கண்ணே

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ணா

அருகில் நீயின்றி தூங்காது கண்ணே” இளையராஜா இசையில் கங்கை அமரன் வரிகளில் கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

”கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்

ஜன்னலில் பார்த்திருந்தேன்

கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்

என்னுடல் வேர்த்து இருந்தேன்

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்

மன்னவன் ஞாபகமே” இளையராஜா இசையில் வாலி வரிகளில் தென்றலே என்னைத் தொடு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கே.ஜே. யேசுதாஸ் & உமா ரமணன் இருவரும் இணைந்து பாடி இருப்பார்கள்.

”பொன்மானே கோபம் ஏனோ

பொன்மானே கோபம் ஏனோ

காதல் பால்குடம் கல்லாய்ப் போனது

ரோஜா ஏனடி முள்ளாய் போனது

பொன்மானே கோபம் ஏனோ

பொன்மானே கோபம் ஏனோ” இளையராஜா இசையில் ஒரு கைதியின் டைரி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை உமா ரமணன், உன்னி மேனன் இணைந்து பாடி இருப்பார்கள்.

"கண்ணும் கண்ணும்தான்

கலந்தாச்சு கலப்பில் காதல் தான்

கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு

போயாச்சு என்னில் உன்னை

நான் சோ்த்து வைக்கலாமா

வாழும் வரைக்கும்

நான் செலவாக வரவா" திருப்பாச்சி திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை உமா ரமணன், ஹாிஷ் ராகவேந்திரா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடி இருப்பார்கள்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி