தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ilaiyaraja : ‘A.r.ரஹ்மான்ட்ட போய்ட்டல்ல இனி என் இசை கிடையாதுன்னு சொல்லிட்டார்’- ராஜாவின் கோரமுகத்தை கிழித்த பாடகி!

Ilaiyaraja : ‘A.R.ரஹ்மான்ட்ட போய்ட்டல்ல இனி என் இசை கிடையாதுன்னு சொல்லிட்டார்’- ராஜாவின் கோரமுகத்தை கிழித்த பாடகி!

Jun 25, 2023, 01:24 PM IST

அவரை மனோ சமாதானப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அவரது உடல்நலம் சரியில்லாமல் போக அவர் தான் பாட இருந்த அனைத்து ரெக்கார்டிங்கையும் கேன்சல் செய்து இருக்கிறார்.
அவரை மனோ சமாதானப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அவரது உடல்நலம் சரியில்லாமல் போக அவர் தான் பாட இருந்த அனைத்து ரெக்கார்டிங்கையும் கேன்சல் செய்து இருக்கிறார்.

அவரை மனோ சமாதானப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அவரது உடல்நலம் சரியில்லாமல் போக அவர் தான் பாட இருந்த அனைத்து ரெக்கார்டிங்கையும் கேன்சல் செய்து இருக்கிறார்.

இன்று ஆஸ்கர் நாயகன் என உலகமே கொண்டாடும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் முதன் முதலாக இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் வெளியாகி 30 வருடங்கள் ஆனாலும் அந்தப்படத்தில் இவர் போட்ட அனைத்து மெட்டுக்கள் இன்றும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Rajinikanth: அந்த படத்தில் ஊர்வசி நடிக்கவே கூடாது.. ரஜினி சொல்லியதால் கடைசி நிமிடத்தில் மாற்றப்பட்ட நடிகை

Nayanthara: இந்த மூன்று பேர் இல்லாமல் வெளியே போகமாட்டேன்.. குழந்தைகளுக்காக அடம் பிடிக்கும் நயன்

இயக்குனர் பாலச்சந்தர் அறிமுகம் படுத்திய நடிகை.. நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நாயகி சரிதா பிறந்தநாள் இன்று!

Rachna Banerjee: முதல் முறையாக எம்பி ஆக தேர்வான பார்த்திபன் பட ஹீரோயின்! மேலும் மூன்று பேர் வெற்றி

பாடகி மின்மினி!

குறிப்பாக ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் மனதை வருடும் பாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்தப்பாடலை பாடகி மின்மினி பாடியிருந்தார். அண்மையில் மலையாளம் டிவி சேனல் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியதின் பின்னர் இளையராஜா தன்னுடன் பாடல்கள் பதிவு செய்வதையே நிறுத்தி விட்டார் என்று பேசி இருக்கிறார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து சொல்லப்படும் தகவல்களின் படி, “ இளையராஜாவிற்கு மின்மினி நிறைய பாடல்களை பாடுவதாக இருந்ததாம். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய பின்னர் இளையராஜா மின்மினியிடம் வேறொரு இடத்தில் பாட ஆரம்பித்து விட்டாள். இனி அவள் அதனை மட்டுமே தொடர வேண்டும் என்று சொன்னாராம்.

இளையராஜா!

இந்த சம்பவம் ஒரு பாடல் பதிவின் போது நடந்திருக்கிறது. அவருடன் சகபாடகராக மனோ இருந்திருக்கிறார். இளையராஜா சொன்னதைக்கேட்டு அதிர்ச்சியான மின்மினி அங்கேயே உடைந்து அழுதிருக்கிறார். அவரை மனோ சமாதானப்படுத்தி இருக்கிறார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அவரது உடல்நலம் சரியில்லாமல் போக அவர் தான் பாட இருந்த அனைத்து ரெக்கார்டிங்கையும் கேன்சல் செய்து இருக்கிறார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தம்மா படத்தில் இடம் பெற்ற ‘பச்ச கிளி பாடும்’ பாடலை பாடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி