தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sevvalai Rasu: கோடி ரூபாய் கொடுத்தாலும் தன் கொள்கைகளை கைவிடாத செவ்வாழை ராசு

Sevvalai Rasu: கோடி ரூபாய் கொடுத்தாலும் தன் கொள்கைகளை கைவிடாத செவ்வாழை ராசு

Aarthi V HT Tamil

May 18, 2023, 12:35 PM IST

செவ்வாழை ராசு மறணமடைந்த நிலையில் அவரின் பழைய பேட்டி வீடியோ வைரலாகிறது.
செவ்வாழை ராசு மறணமடைந்த நிலையில் அவரின் பழைய பேட்டி வீடியோ வைரலாகிறது.

செவ்வாழை ராசு மறணமடைந்த நிலையில் அவரின் பழைய பேட்டி வீடியோ வைரலாகிறது.

தேனியை சேர்ந்த காமெடி நடிகர் செவ்வாழை ராசு (62). இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'கிழக்கு சீமையிலே’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ட்ரெண்டிங் செய்திகள்

PadayappaRerelease: தேனப்பன் - ரஜினி சந்திப்பு.. ரீ ரிலிஸ் ஆகிறதா படையப்பா..? - முழு விபரம் இங்கே!

Karthigai Deepam: ‘பூஜை அறையில் கருநாகம்; அலறிய அபிராமி குடும்பம்; கலக்கத்தில் தீபா; கார்த்திகை தீபம் அப்டேட்

Cook With Comali: மிகப்பெரிய ஷாக்.. குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய முதல் போட்டியாளர்.. கதறும் ரசிகர்கள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

இவர் அடுத்ததாக கஸ்துாரிராஜா இயக்கத்தில் 'தாய்மனசு' படத்தில் நடித்தார். இவர்கள் இருவரது இயக்கத்திலும், 7 ஆண்டுகளில் 21 படங்கள் வரை நடித்து உள்ளார். கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தில் பொணந்திண்ணி என்ற கதாபாத்திரம் நடித்தன் மூலம் புகழ் பெற்ற செவ்வாழை ராசு, மைனா, கிழக்குச் சீமையிலே, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி இன்று ( மே 18 ) உயிரிழந்தார். அவர் மறைவு ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக அவர் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் படங்களில் நடிக்க வரவில்லை என பேட்டி அளித்திருந்தார்.

அவர் பேசியதாவதது,“ எனக்கு பெற்றோர் வைத்த பெயர் ராசு. குழந்தையாக நான் இருந்தபோது சிவப்பாக இருந்ததால், என்னை 'செவ்வாழை' என அழைத்தனர். பின்னர் பெயரும் செவ்வாழை ராசு என மாறிவிட்டது.

'பருத்தி வீரன்' எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. மைனா, கந்தசாமி, வேலாயுதம், பெரியமனுஷன், கருத்தம்மா, மலைக்கோட்டை, வல்லமை தாராயோ என 140க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து இருக்கிறேன். விஜய்யுடன் நடித்த வேலாயுதம் எனக்கு 100 ஆவது படம்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் நடிக்க வரவில்லை. பொழுதுபோக்காக தான் நான் நடிக்க வந்தேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.

கடவுள் மறுப்பு கொள்கை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்படி வந்த பல வாய்ப்புகளை தட்டி வேண்டாம் என சொல்லி இருக்கிறேன்” என்றார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி