தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rudhran Review: ‘பைட் இருக்கீ.. டான்ஸ் இருக்கீ.. கதை இருக்கா? ருத்ரன் விமர்சனம்!

Rudhran Review: ‘பைட் இருக்கீ.. டான்ஸ் இருக்கீ.. கதை இருக்கா? ருத்ரன் விமர்சனம்!

Apr 14, 2023, 10:32 AM IST

ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. ஆக்ஷனை தவிர அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. ஆக்ஷனை தவிர அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. ஆக்ஷனை தவிர அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் ருத்ரன். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி இருக்கிறார். 

ட்ரெண்டிங் செய்திகள்

67 years of Manamagan Thevai: காதல், காமெடி கலந்த ஆள்மாறாட்ட கதை! பம்பர கண்ணாலே பாடல் இடம்பிடித்த படம்

HBD K. Jamuna Rani: 6,000 பாடல்கள் பாடியவர்.. பல ஜாம்பவான்களுடன் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஜமுனா ராணி பிறந்த நாள்

Tamannaah Bhatia: படுக்கையறை காட்சியில் நடிக்க பயப்படும் நடிகர்கள்.. காரணத்தை விளக்கிய தமன்னா

Raavanan: கடினமாக இருந்த மணிரத்னம் படப்பிடிப்பு.. அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா! ராய்!

தன் குடும்பத்தை தீர்த்துக் கட்டிய வில்லனையும் அவனது ஆட்களையும் கதாநாயகன் பழி வாங்கும் பழைய கதையே ருத்ரன். எதற்காக? ஏன்? என்பது மீதிக்கதை!

எமோஷன், ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ், அம்மா சென்டிமென்ட் என எல்லாம் இருக்கும் கமர்ஷியல் ஹீரோவாக ராகவா லாரன்ஸ். வழக்கம் போல எல்லாவற்றிலும் நன்றாகவே நடித்து இருக்கிறார். என்ன ஆக்ஷனில் மட்டும் ஓவர் டோஸ்.

பிரியா பவானி ஷங்கரின் காதலும், எமோஷனும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ். சென்டிமென்ட் பகுதிக்கு கனகச்சி தமான தேர்வு. லாரன்ஸ் மற்றும் அவருக்கு இடையேயான காட்சிகள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்றன.

மகள் சென்டிமென்ட் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. நண்பனாக காளி வெங்கட் வெளிப்படுத்தி நடிப்பு இருக்கும் ரெகுலர் ஃப்ரண்டுக்கான நடிப்பு. வில்லன் சரத்குமார் நடிப்பு மிரட்டல்.

ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. ஆக்ஷனை தவிர அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்த கதிரேசன் படத்தின் காட்சிகளை நன்றாகவே எதிர்கொண்டு இருக்கிறார். ஜிவி இசை ஓகே ரகம். ஆனால் படத்தில் வேறு எந்த புதுமையும் இல்லை. ஆக்ஷன் என்ற பெயரிலும், மாஸ் வசனம் என்ற பெயரிலும் அமைந்திருக்கும் காட்சிகள் கிரிஞ்ச் வகையறாவை சேர்ந்தவை.எதையும் எதிர்பார்க்காமல் வந்தால், ஒரு ஞாயிற்றுக்கிழமை ஃபேமிலியோடு பார்க்கலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி