தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ramaniammal Passed Away : ஷாக்.. ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார்!

Ramaniammal Passed Away : ஷாக்.. ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார்!

Divya Sekar HT Tamil

Apr 04, 2023, 12:00 PM IST

பாடகி ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் வயது மூப்பால் இன்று காலமானார்.
பாடகி ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் வயது மூப்பால் இன்று காலமானார்.

பாடகி ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் வயது மூப்பால் இன்று காலமானார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான, பின்னணி பாடகி ரமணியம்மாள் (69) வயது மூப்பால் காலமானார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப இசை நிகழ்ச்சியில் ரமணி பாட்டி வெற்றி பெற்று மக்களின் மனதில்  இடம் பெற்றவர்.

ட்ரெண்டிங் செய்திகள்

GV Prakash Saindhavi: ‘உயிரும் உலகமும் பிரிந்தது’ …‘நாங்கள் பிரிந்து விட்டோம்’ - ஜிவிபிரகாஷ்குமார் அறிக்கை!

Karthi Birthday: கார்த்தி பிறந்தநாள்; கரம்கோர்க்கப்போகும் ரசிகர்கள்;ரெடியாகும் ராஜீவ் காந்தி மருத்துவமனை- விபரம் உள்ளே!

Karthigai Deepam: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா - கார்த்திகை தீபம் அப்டேட்!

Star Movie: 'பகலிலும், மதியத்திலும் ஸ்டார் ஒளிர்கிறது' - இயக்குநர் இளன் நெகிழ்ச்சி!

ரமணியம்மாள் 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து, மிகுந்த அவதிப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வேளையில், அவரின் பாடல் பாடும் திறனை அறிந்த சிலர் 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி நடத்தும் 'சரிகமப' நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டனர். 

அதில் தொடர்ந்து பாடி, இரண்டாமிடத்தைப் பெற்று, அதற்காக பரிசும் பெற்றுள்ளார்.இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரை ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் அன்போடு அழைத்து வந்தனர்.

இவர் ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி