தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Legend: 'இன்பக்கடலில் நீந்த தயாரா? Ottல் வெளியானது தி லெஜன்ட்!

The Legend: 'இன்பக்கடலில் நீந்த தயாரா? OTTல் வெளியானது தி லெஜன்ட்!

Mar 03, 2023, 12:49 PM IST

தன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தி லெஜண்ட் சரவணன்
தன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தி லெஜண்ட் சரவணன்

தன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தி லெஜண்ட் சரவணன்

தி லெஜண்ட் திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட மறுத்து தொடர்ந்து முரண்டு பிடித்து வந்த லெஜண்ட் சரவணன் தற்போது ஒரு வழியாக ஒப்புக் கொண்டதால் இன்று OTTயில் வெளியாகி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

GV Prakash Saindhavi: தமிழர் மாண்பு எங்க போச்சு.. அத்துமீறி நுழைறீங்க... செருப்படி பதில் கொடுத்த ஜிவி!

Karthigai Deepam: தீபாவுக்கு காதலனை அறிமுகப்படுத்திய ரம்யா.. கேமை தொடங்கும் ஐஸ்வர்யா!

Rashmika Mandanna: ‘’ப்பா.. 10 வருஷத்தில் என்ன வளர்ச்சி'': ராஷ்மிகா மந்தனா சொல்வது என்ன?

Today Movies In Tv: சூப்பர் ஹிட் மூவிஸ்.. தொலைக்காட்சியில் இன்றைய படங்கள் என்னென்ன தெரியுமா?

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து, நடித்து இருக்கும் படம், 'தி லெஜண்ட்'. ஜேடி-ஜெர்ரி இயக்கிய இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். இதில் ஊர்வசி ரவுத்தலா, யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு, லதா உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அத்துடன் அமேசான் ஃப்ரைம் ஓடிடி தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டது.

ஆனால் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய சரவணன் அருள் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தன் படத்தை எந்த ஓடிடியிலும் வெளியிட விரும்பவில்லையாம், எத்தனை கோடிகள் கொடுத்தாலும் ஓடிடி தளங்களுக்கு தனது படத்தை விற்க முடியாது என திட்டவட்டமாக சொல்லியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இன்று தி லெஜெண்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரின் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி